அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் மூன்றுநாள் கல்வி பயிலரங்கு
இந்தியாவெங்கிலுமிருந்து பங்கேற்கும் கண் மருத்துவவியல் மாணவர்களுக்கு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் மூன்றுநாள் கல்வி பயிலரங்கு
கல்பவிருக்ஸா’19 என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வான 13-வது வருடாந்திர தொடர் மருத்துவ கல்வி திட்டம் (CME) நாடெங்கிலுமிருந்து கண் மருத்துவவியல் மாணவர்களை ஒன்றாக இணைத்திருக்கிறது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதன் ஆராய்ச்சி மற்றும் கல்வி செயல் பிரிவான கண் ஆராய்ச்சி மையம், சென்னை என்பதோடு இணைந்து, கண் மருத்துவவியல் மாணவர்களுக்காக தேசிய அளவில் மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இந்த கல்விசார் பயிலரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது
சென்னை, 16 ஆகஸ்ட் 2019: கண் மருத்துவவியல் மாணவர்களுக்காக தேசிய முதுகலை தொடர் மருத்துவ கல்வி திட்டமான (CME)கல்பவிருக்ஸா 19 என்ற பயிலரங்கை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதன் ஆராய்ச்சி மற்றும் கல்வி செயல் பிரிவான கண் ஆராய்ச்சி மையம், சென்னை என்பதோடு இணைந்து நடத்துகிறது. 13-வது வருடாந்திர தொடர் மருத்துவக்கல்வி செயல்திட்டமாக இது நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வை, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆர்பி மையத்தைச் சேர்ந்த டாக்டர். நம்ரதா ஷர்மா அவர்கள் தொடங்கிவைத்தார். இத்தொடக்கவிழா நிகழ்விற்கு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் தலைமை வகித்தார்.
2007 ஆம் ஆண்டில் முதன்முறையாக தொடங்கப்பட்ட கல்பவிருக்ஸா (சமஸ்கிருத இலக்கியத்தில் நமது விருப்பங்களை பூர்த்தி செய்கின்ற தெய்வீக மரமாக கல்பவிருக்ஸா குறிப்பிடப்படுகிறது) என்ற தேசிய அளவிலான முதுகலை தொடர் மருத்துவக் கல்வி செயல்திட்ட நிகழ்வில் தேர்வுகளை எழுதுகின்ற கண்மருத்துவவியல் மாணவர்கள் 50-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களிலிருந்து கலந்து கொள்கின்றனர்.
கண் மருத்துவவியலில் வெவ்வேறு பிரிவுகளில் வல்லுனர்களாக இருக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடவும், அவர்களது உரைகளை கேட்பதற்கும் இச்செயல்திட்டம் ஒரு தளத்தை இம்மாணவர்களுக்கு வழங்குகிறது. மூன்றாவது நாள் நடைபெறுகின்ற ஆர்வமூட்டுகின்ற “நேர்வு விளக்கக்காட்சி” (Case Presentation) என்பது இந்த நிகழ்வின் தனித்துவம் மிக்க சிறப்பம்சமாக இருக்கிறது. இந்நிகழ்வின்போது நடைபெறும் விவாதங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை நேர்வுகளை சமர்ப்பிப்பதில் கல்வியாளர்களிடமிருந்து நேரடியாக ஆலோசனை குறிப்புகளையும் இம்மாணர்வர்கள் பெறுகின்றனர்.
இந்த மூன்றுநாள் பயிலரங்கு நிகழ்வை தொடங்கி வைத்துப் பேசிய டெல்லியிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆர்பி மையத்தைச் சேர்ந்த டாக்டர். நம்ரதா ஷர்மா, “கல்பவிருக்ஸா என்ற இந்நிகழ்வை தொடங்கி வைப்பது உண்மையிலேயே எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது அறிவையும், திறனையும் நிகழ்நிலைப்படுத்திக் கொள்வதற்காக சமீபத்திய சிகிச்சை செயல்முறைகள் குறித்து அறிமுகத்தையும், பரிச்சயத்தையும் கண் மருத்துவ மாணவர்களுக்கு வழங்குவதில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இச்சிறப்பான பணியையும், பங்களிப்பையும் நான் மனமார பாராட்டுகிறேன்,” என்று கூறினார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் இந்நிகழ்வில் பேசுகையில், “13-வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்த கல்பவிருக்ஸா செயல்திட்டமானது, மருத்துவ நேர்வுகளின் விளக்கக்காட்சி மீது அனுபவம் மிக்க கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து நேரடியான ஆலோசனை குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின்போது நடக்கவிருக்கும் விரிவான விவாதங்களும், கலந்துரையாடலும் பெரிதும் பயனளிப்பவையாக இருக்கும். இச்செயல்திட்டமானது, சிறப்பான திறன்களைப் பெறுவதற்கு கண் மருத்துவவியலாளர்களுக்கு உதவுவதோடு, நாம் சேவையாற்ற விழைகின்ற நோயாளிகளை உள்ளடக்கிய பொது சமூகத்திற்கும் அதிக பயனளிப்பதாக இருக்கும்,” என்று கூறினார்.
கல்பவிருக்ஸா 19 நிகழ்வின்போது தேர்ச்சிபெற்று செல்லும் மிகச்சிறந்த மாணவர்களுக்கான டாக்டர். ஜே. அகர்வால் முன்மாதிரி விருது,டாக்டர். வி. வேலாயுதம் நிலையான செயல்திறன் மாணவர் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த நிகழ்வின்போது அதிக ஆர்வமூட்டும் நேர்வை விளக்கக்காட்சியாக சமர்ப்பித்த சிறந்த மாணவருக்கு டாக்டர். (திருமதி) T. அகர்வால் விருதும் வழங்கப்படுகிறது.
செய்முறை பயிற்சி அமர்வில், மாறுகண் போன்ற மிக சிரமமான பிரச்சனைகளை எப்படி பரிசோதிப்பது அல்லது ரெட்டினோஸ்கோப்பி / கோனியோஸ்கோப்பி என்ற நோயறிதல் செயல்முறைகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஒவ்வொரு பிரதிநிதிக்கும் தெளிவான விளக்கம் வழங்கப்படும். இந்நாட்டில் வெகுசில முன்னணி கண் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்ற சமீபத்திய உயர்தொழில்நுட்ப பயோமெடிக்கல் சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய அறிமுக விளக்கத்தையும் அனைத்து பங்கேற்பாளர்களும் பெறுவார்கள். தேர்வு தொடர்புடைய அனைத்து முக்கியமான தலைப்புகளும் மற்றும் செய்முறை தேர்வில் நேர்வு விளக்கக்காட்சியும் இப்பயிலரங்கில் விவாதிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்நிகழ்வின் ஒரு அங்கமாக நேரலையாக காட்டப்படும் ஒரு அறுவைசிகிச்சை அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவரோடு கலந்துரையாடுவதற்கும் வசதி இருக்கும். பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் ஒரு க்விஸ் நிகழ்வும் மற்றும் பலர் போட்டியிடுகின்ற அதிவேக மீளாய்வு சுற்றும் நடைபெறுகிறது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குறித்து :
About Dr. Agarwal’s Eye Hospital:
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை 1957ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கண் நோய்கள்/குறைபாடுகளுக்கு ஒரு நிறுத்த அமைவிடத்தில் தீர்வுகளை வழங்குவதற்கு ஒரு முழுமையான கண் மருத்துவமனையாக இயங்கும் இது,தொடங்கப்பட்டு 61 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 33 மருத்துவமனைகளை நடத்தி வரும் இது, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாக, ஒடிசா, மஹாராஷ்டிரா, அந்தமான்,மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மருத்துவமனைகளைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. சர்வதேச அளவில் மிகச்சிறப்பாக செயல்படுகின்ற நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கிய முதல் நடவடிக்கையாக மொரீசியஸில், நடத்தப்பட்ட மூன்றாம் நிலை கண் பராமரிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும் ஆப்பிரிக்கா,கிழக்கு ஆசிய நாடுகளிலும் இம்மருத்துவமனை 13 கிளைகளைக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச அமைப்பாக தன்னை விரிவுபடுத்தியிருக்கிறது.