ஜெம் மருத்துவமனை அறிமுகப்படுத்தும் பல உறுப்பு மாற்று மையம் சென்னையில் ஆரம்பம்

 

ஜெம் மருத்துவமனை அறிமுகப்படுத்தும்
பல உறுப்பு மாற்று மையம் சென்னையில் ஆரம்பம்

~ஆகஸ்டு 17,18 தேதிகளில், கல்லீரல் அறுவை சிகிச்சை பற்றிய முதல் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது ~

சென்னை, ஆகஸ்டு 17, 2019: லேப்ரோஸ்கோபிக் மற்றும் ரொபோடிக் அறுவை சிகிச்சைகளுக்கான இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஜெம் மருத்துவமனை சார்பில், கல்லீரல் அறுவை சிகிச்சை பற்றிய முதல் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஆகஸ்டு 17,18 தேதிகளில் நடைபெறும் இந்த கருத்தரங்கின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிப்பிற்குரிய தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள், ஜெம் மருத்துவமனையின் பல உறுப்பு மாற்று மையத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள், கோரோ ஹோண்டா (ஜப்பான்), சூன் ஹ்யூக் டேவிட் க்வோன் (அமெரிக்கா), ஹோ-சியாங்ஹன் (கொரியா), முகமது அபு ஹிலால் (பிரிட்டன்), ரவிசாக் சன்வாட் (தாய்லாந்து), தாங்சுன்-காய் (ஹாங்காங்), டிரான் காங் டுய் லாங் (வியட்நாம்), சியோயிங் வாங் (சீனா), யாயோ-மிங் வு (தாய்வான்) ஆகியோர் கல்லீரல் அறுவை சிகிச்சைகள் குறித்து கருத்தரங்கில் உரையாற்ற உள்ளனர்.

சர்வதேச கருத்தரங்கு குறித்து பேசிய மருத்துவர் அசோகன், ஜெம் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி, “இந்தியாவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட முன்னணி கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர். 400-க்கும் மேற்பட்ட சிறப்பு பிரதிநிதிகளும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். வைரஸ் தொற்று நோய் மற்றும் மது பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கூடுதலாக, கொழுப்பு கல்லீரல் நோய்களும் அதிகரித்துள்ளன. எனவே, கல்லீரல் துளை அறுவை சிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது” என்றார்.

கோவை ஜெம் மருத்துவமனையில் மருத்துவர் சி.பழனிவேலு தலைமையிலான குழு, இந்தியாவிலேயே முதல் முறையாக வாழும் நன்கொடையாளர் லேப்ரோஸ்கோபிக் ஹெபக்டோமியை வெற்றிகரமாக செய்து முடித்தது. இந்த சிகிச்சை முறையில்,

வாழும் நன்கொடையாளரின் கல்லீரல் எடுக்கப்பட்டு நோயாளியின் உடலில் பொருத்தப்படும். சாதாரண அறுவை சிகிச்சைகளினால் நன்கொடையாளரின் உடல்நலத்துக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம், இந்த பாதிப்புகள் தவிர்க்கப்படும். இதன் மூலம், கல்லீரல் உறுப்பு தானம் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஜெம் மருத்துவமனையில், லேப்ரோஸ்கோபிக் அல்லது ரொபோடிக் அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல் மாற்று செய்யப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சர்வதே சகருத்தரங்கில் கல்லீரல் சிகிச்சைகள் குறித்து விரிவாகப் பேசப்படும்.

ஜெம் மருத்துவமனை இயக்குனர், கருத்தரங்கம் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பி.செந்தில்நாதன் பேசுகையில், “கருத்தரங்கம் நடைபெறுவதற்கு முன்னதாக, அறுவை சிகிச்சை குறித்த பயிலரங்கம் ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், சர்வதேச நிபுணர்கள் உட்பட இந்தியாவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். இது போன்ற பயிலரங்கம், அறுவை சிகிச்சைகள் குறித்த பல தகவல்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *