உலகின் அதிநவீன 4K, 3D மற்றும் ரோபாட்டிக் விஷூவலைசேஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகம்
சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவ சேவையை
நவீனப்படுத்தும் நோக்கில், நரம்பியல் அறுவைசிகிச்சைகளில்
உதவக்கூடிய உலகின் அதிநவீன 4K, 3D மற்றும் ரோபாட்டிக்
விஷூவலைசேஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகம்
செய்துள்ளது,
சென்னை , ஆகஸ்ட் 21, 2019: காவேரி மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல்
அறுவைசிகிச்சை பிரிவானது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் திரு. C.
விஜயபாஸ்கர் மற்றும் விமானப்படை தளபதி சிம்ஹகுட்டி வர்தமான் ஆகியோரால்,
ஆகஸ்ட் 21, 2019 புதன்கிழமையன்று, மூளை மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சையில் மூத்த
ஆலோசகர், டாக்டர் திரு. ஷியாம் சுந்தர் கிருஷ்ணன், தண்டுவடம் மற்றும் நரம்பியல்
அறுவைசிகிச்சையில் மூத்த ஆலோசகர் டாக்டர் திரு. பாலமுரளி கோபாலகிருஷ்ணன்
மற்றும் காவேரி மருத்துவமனையின், நிர்வாக இயக்குனர், டாக்டர் திரு. அரவிந்தன்
செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது,
முன்னணி பன்னோக்கு மற்றும் மூன்றாம் நிலை தொடர் மருத்துவமனையான, காவேரி
மருத்துவமனையானது மருத்துவ சேவையில் நவீன தொழில்நுட்பத்தை
நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் 3D மற்றும்
ரோபாட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையாகவும், நவீன முறையிலும்
நரம்பியல் மற்றும் தண்டுவட சிகிச்சையினை அளிக்கலாம், மூளை மற்றும் தண்டுவட
அறுவைசிகிச்சையில் மூத்த ஆலோசகர், டாக்டர் திரு. ஷியாம் சுந்தர் கிருஷ்ணன்,
தண்டுவடம் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சையில் மூத்த ஆலோசகர் டாக்டர் திரு.
பாலமுரளி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான வல்லுநர் குழுவினர், இந்த
நரம்பியல் அறுவைசிகிச்சை துறையை வழிநடத்துவர்.
இந்த அதிநவீன நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவை துவங்கியதன் மூலம், நரம்பியல்
சிகிச்சை வழங்குவதில் காவேரி மருத்துவமனை முன்னோடியாகத் திகழ்கின்றனர். புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்ட 3D நுண்ணோக்கி மற்றும் ரோபாட்டிக் அறுவைசிகிச்சை கருவியானது
கீழ்வரும் வழிகளில் உதவும்,
பாதுகாப்பு மற்றும் துல்லியம் அதிகரிக்கும்
• சிகிச்சை பலனின் தரம் கூடுதலாக இருக்கும்
• குறைவான அறுவைசிகிச்சை நேரம் மற்றும் தொற்றுக்கான வாய்ப்புகள்
3D நுண்ணோக்கியுடன் கூடுதலாக நரம்பியல்-ஊடுருவி வசதியின் மூலம் ரத்த நாளங்கள்
மற்றும் இதர திசுக்களை பாதிக்காத வகையில், மூலை மற்றும் தண்டுவடத்தில் உள்ள