காகிதப் பைகள், துணிப்பைகள், பாக்குமர பொருட்கள் மற்றும் பனை ஓலைப்பொருட்களும் விற்பனை
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் நவராத்திரி, ஆயூத பூஜை, மற்றும் தீபாவளியை முன்னிட்டு , நவராத்திரி கொலு பொம்மைகள், அத்தியவசியமான பொருட்கள், ஜவுளிரகங்கள் என் பல்வேறு பொருட்கள் இக்கண்காட்சியல் காட்சி படுத்தப்பட்டுள்ளன. மேலும்மகளிர் உயிர்ம வேளாண் சந்தை
சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம்
04.10.2019 முதல் 07.10.2019 வரை,
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு
நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதிலுமுள்ள
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல் பணியினை
மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கங்களும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில
வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மேற்கண்ட மாவட்ட சங்கங்களுடன் ஒருங்கிணைந்து சிறப்புடன்
செயல்படுத்தி வருகிறது.
தற்போது இயற்கை வேளாண் பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்தல் மற்றும்
அப்பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்திடும் நோக்கில்
தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில்
மாதந்தோறும் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகளிர் உயிர்ம வேளாண் சந்தை என்ற
பெயரில் வேளாண் மகளிரின் விளை பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இம்மாதத்திற்கான மகளிர் உயிர்ம வேளாண் சந்தை 04.10.2019 முதல்
07.09.2019 வரை நான்கு நாட்கள் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள
அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்விற்பனைக் கண்காட்சியில் மகளிர்
தங்களது வேளாண் பொருட்களான கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள், அரிசி வகைகள், செடிகள்,
விதைகள், மரசெக்கு எண்ணெய், சிறுதானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும்
நெகிழிக்கு மாற்று பொருட்களான காகிதப் பைகள், துணிப்பைகள், பாக்குமர பொருட்கள் மற்றும் பனை
ஓலைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நல்ல வாய்ப்பினை பொது மக்கள் பயன் பெறுமாறு ள்ளப்படுகிறது.