ஜப்பான் மருத்துவர்களுடன் இணைந்து சிக்கலான இதய ரத்த நாள அடைப்புக்கு (கரோனரி தமனி அடைப்பு) வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்டுள்ளது:

இந்தியாவிL ஆரோக்கியப் பராமரிப்பு சேவை வழங்குவதில் முதன்மையான மருத்துவமனையாக முன்னணியில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனை, நீண்ட கால மொத்த இதய ரத்த நாள அடைப்பு சிடிஓ (chronic total occlusion – CTO) தொடர்பான பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிலரங்கலம் சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (17-10-2019) நடைபெற்றது. ஜப்பானின் அய்ச்சி பகுதியில் உள்ள இச்சிநோமியா நகரில் அமைந்துள்ள இச்சிநோமியா நிஷி மருத்துவமனையின் இதய நோய் மருத்துவப் பிரிவு இயக்குநரும் மிகப் பிரபலமான இதய நோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் டொமோஹிகோ டெரமோட்டோ (Dr. Tomohiko Teramoto, Chief Director at the Cardiovascular Medicine, Ichinomiya Nishi Hospital, Ichinomiya, Aichi, Japan) முன்னிலையில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் 50 இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். இதில் இதய உள்ளீ்ட்டு மருத்துவ சிகிச்சைத் துறையில் (interventional cardiology) உள்ள நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

டாக்டர் டொமோஹிகோ டெரமோட்டோ, சிக்கலான இதய உள்ளீட்டு சிகிச்சைத் துறையில் உள்ள முன்னோடிகளில் ஒருவர் ஆவார். மிகச் சிக்கலான வகையிலான பல ஆயிரக்கணக்கான இதய உள்ளீட்டு மருத்துவ சிகிச்சைகளை இவர் மேற்கொண்டுள்ளதுடன் ஏராளமான இதய நோய் சிகிச்சை நிபுணர்களுக்கு இந்த முறை பற்றி பயிற்சியும் அளித்துள்ளார்.

தமனியில் முழுவதுமாக அடைப்பு ஏற்படும்போது நாள்பட்ட மொத்த இதய ரத்த நாள அடைப்பு சிடிஓ (chronic total occlusion – CTO) ஏற்படும். உள்ளே சுவர்களுக்குள் 3 மாதங்களுக்கும் மேலாக கொழுப்பு படியும்போது நெஞ்சு வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும். இந்த அடைப்புகள் கடினமான திசுக்களால் ஆனவை. இவற்றை வழக்கமான வழிகாட்டி வயர்கள் (கைடு வயர்), பலூன் வடிகுழாய் (பலூன் கேதடெர்ஸ்) போன்றவற்றால் கடப்பது எளிதல்ல. உலக அளவில் இந்த சிடிஓ-வுக்கு இதய உள்ளீட்டு சிகிச்சை முறைகளே கடைசி வழி என கருதப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சைகளின்போது சிடிஓ-வுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய கருவிகள், அனுபவம், சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சையின் வெற்றி விகிதம் அமைகிறது.

குறிப்பிட்ட பகுதி அடைப்புகள், சிறிய ரத்த நாள அடைப்புகள், சிடிஓ எனப்படும் 100% அடைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகை அடைப்புகள் மற்றும் கடுமையான அடைப்புகளுக்கு தற்போது நவீன கருவிகளைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகள் அதிக அளவில் வெறறி அடைகின்றன. வழக்கமான ஆன்ஜியோபிளாஸ்டி போல் அல்லாமல் ஜப்பானியர்கள், மிகச் சிறப்புத் தன்மை வாய்ந்த வயர்கள், பலூன்கள் மற்றும் கேதெடெர்கள் உள்ளிட்டவற்றை சிடிஓ சிகிச்சைக்காக பயன்படுத்துகின்றனர்.

சிடிஓ தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற பயிலரங்கில் கரோனரி தமனி நோய்க்கு, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நவீன கருவியைக் கொண்டு திறம்பட்ட வகையில் சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் சென்னை மற்றும் சென்னைக்கு வெளியே இருந்து ஏராளமான இதய நோய் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதய உள்ளீட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிகிருஷ்ணன் பார்த்தசாரதி, (Dr. Harikrishnan Parthasarathy, Senior Consultant Interventional Cardiologist, Apollo Speciality Hospital, Vanagaram) அண்மையில் இந்த சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள வெற்றிகரமான நடைமுறைகள் குறித்துக் கூறுகையில், “கரோனரி தமனி நோய் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் இந்தியாவில் இளைஞர்களுக்கு இது அதிகமாக ஏற்படுவது கவலை கொள்ளச் செய்கிறது. முறையற்ற வாழ்க்கை நடைமுறைகளும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாகும். மருந்து தோய்க்கப்பட்ட ஸ்டெண்ட்கள், கரோனரி தமனி நோய்கள் சிகிச்சையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தின. பைபாஸ் அறுவை சிகிச்சையால் ஏற்படும் பலன்களுக்கு இணையான பலன்கள் இதில் கிடைப்பதுடன் மிகக் குறைந்த சிக்கல்கள்தான் இந்த ஸ்டெண்ட் முறையில் உள்ளன. பல்வேறு விதமான அடைப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதில் ஜப்பான் மருத்துவர்களுடன் நாங்கள் இணைந்து செயலாற்றி வெற்றி கண்டுள்ளோம்.

நாள்பட்ட மொத்த இதய ரத்த நாள அடைப்பு சிடிஓ-வுக்காக (chronic total occlusion – CTO) தனிப்பட்ட மையத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக ஏற்படுத்தி அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த மையங்களில் 100 சதவீத தமனி அடைப்புக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சிடிஓ மையங்களில் இண்ட்ராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (ஐவியூஎஸ் – IVUS) போன்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சிடிஓ நடைமுறைகளுக்கு உதவும் வகையிலான இந்த நடைமுறைகள் நாட்டிலேயே மிகச் சில மையங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மிகச் சிக்கலான நடைமுறைகளை மேற்கொள்ள ஐவியூஎஸ் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் பாதுகாப்பான கருவி ஆகும். சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக சிடிஓ நடைமுறைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு ஐவியூஎஸ் கேதெடரைசேஷன் தொகுப்புகள், சிடி கரோனரி ஆன்ஜியோகிராஃபி, கார்டியாக் எம்ஆர்ஐ மற்றும் கார்டியாக் வயர்கள், மைக்ரோ கேதெடெர்கள், பலூன்கள் மற்றும் இண்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (ஐவியூஎஸ்), ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராஃபி உள்ளிட்ட மிகச் சிறந்த நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *