உள்ளாட்சி தேர்தலை பல பொய்களை சொல்லி நடக்கவிடாமல் தடுத்தது திமுக என அதிமுகவின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் குற்றச்சாட்டு…
தாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்ததால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை பல பொய்களை சொல்லி நடக்கவிடாமல் தடுத்தது திமுக என அதிமுகவின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் குற்றச்சாட்டு…
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் அதிமுக சார்பாக வழங்கும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது…
இதில் தென்சென்னை மாவட்டத்தில் உள்ள 28 மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர இடங்களுக்கு விருப்ப மனுக்களை அதிமுகவினர் பலர் வழங்கினர்,இந்த நிகழ்வில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா கலந்துகொண்டு அதிமுகவினர் இடமிருந்து விருப்ப மனுக்களை பெற்றனர்…
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன்…
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை மலைவாழ் மக்களுக்கு உரிய இடங்களை வழங்கவில்லை உள்ளிட்ட பல பொய்களை சொல்லியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தவிடாமல் தடுத்தது திமுக மற்றும் தற்போதைய தலைவராக உள்ள ஸ்டாலின்தான் எனவும்
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்…