பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் & பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நிகழ்வு

 

 

 

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் & பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் பங்குபெற்ற 24 மணி நேர தொடர் கராத்தே நிகழ்ச்சி.

உலக சாதனை புத்தகத்தில் பதிவானது.

பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து 24 மணி நேரம் தொடர்ந்து நிகழ்த்திய கராத்தே தற்காப்புக்கலை நிகழ்வு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது மற்றும் தற்காப்புக் கலையின் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்றது.

கராத்தே பயிற்சியாளர் ஜயப்பன் வழிகாட்டுதலில், 20 பேர் வீதமாகப் பிரிக்கப்ப்ட பல்வேறு குழுவினர், தொடர்ந்து கராத்தே தற்காப்புக் கலையைச் செய்து காட்டினர், 7 வயது முதல் 30 வயது வரையிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

சட்டகல்லூரி, ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களும், பெண்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு காரத்தே கலையை நிகழ்த்திக் காட்டினர் நவம்பர். 29, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொட்ங்கிய நிகழ்ச்சி, மறுநாள் 30.11.19 சனிக் கிழிமை மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது.

உலக சாதனை மையத்தினரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சோழன் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர். மாணவ, மாணவிகளுக்கு உலக சாதனை சான்றிதழ்களை அதன் நிர்வாகிகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *