சர்வதேச உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு “ரீச் டூ பீச்” என்ற நிகழ்வினை

 

 

 

மாற்றுத்திறனாளிகளின் கனவினை நிறைவேற்றிய ரைன் டிராப்ஸ் அமைப்பினர்…

சர்வதேச உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு “ரீச் டூ பீச்” என்ற நிகழ்வினை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரைன் டிராப்ஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.நடிகர் சரத்குமார் விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோஷம் பின்னணி பாடகர் வேல்முருகன்.தமிழ்நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்கத்தலைவர் வரத குட்டி இந்தியா பிராஜக்ட்ஸ் பூபிஎஸ் நாகராஜன் ரைன் டிராப்ஸ் அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார்..இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டது மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும் சென்ற ஆண்டு தனது மனைவி நடிகை ராதிகா கலந்து கொண்டு இந்த நிகழ்வின் சிறப்பு குறித்து எனக்கு எடுத்துரைப்பது மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் ஆர்வத்தை தூண்டினார்..‌மாற்றுத் திறனாளிகளுக்கு நாமனைவரும் இயன்றவரை உதவி செய்வதை கடமையாக இருக்கிறது அடுத்த ஆண்டு இந்த கடற்கரை மணலில் அவர்கள் தானாகவே சென்று கடல் அலைகளை தொடும் வகையில் சிமெண்ட் தளம் அமைக்கப்படும் என தெரிவித்தார்..பின்னர் மாற்றுத்திறனாளிகளை தன் கரங்களால் தூக்கி சென்று கடல் அலைகளை தொட வைத்து கூடியிருந்த பொதுமக்களையும் ரசிகர்களையும் மாற்றுத்திறனாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கடற்கரைக்குச் செல்ல வேண்டும் ஈர மணலில் அமர்ந்து கடல் அலைகளை ரசித்தபடி அதில் கால் நனைக்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகளின் கனவினை ரைன் டிராப்ஸ் அமைப்பு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்கத்துடன் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *