மீனாட்சி லேப்ஸ் பிராண்ட் லோகோ

மீனாட்சி லேப்ஸ் பிராண்ட் லோகோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் மற்றும் திரைப்பட இயக்குநர் இக்கே ராத்தே வெளியிட்டனர்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஆறு அமைவிடங்களில் நவீன, மேம்பட்ட நோயறிதல் பரிசோதனை மையங்களை மீனாட்சி லேப்ஸ் தொடங்கியிருக்கிறது

● தென் தமிழ்நாட்டு மக்களுக்கு பிழைகள் இல்லாத மிகத் துல்லியமான பரிசோதனை அறிக்கைகளை விரைவாக வழங்குவதே இதன் நோக்கமாகும்.

● 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 10 பரிசோதனை மையங்களை

மதுரை, 8 ஜனவரி 2020: புகழ்பெற்ற இசையமைப்பாளர் திரு. யுவன் சங்கர் ராஜா, மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டாக்டர். எஸ். குருசங்கர் மற்றும் திரைப்பட இயக்குநர் திரு. இக்கே ராத்தே அதிநவீன மற்றும் முற்றிலும் தன்னியக்கம் கொண்ட ஆய்வக கூடங்களின் ஒரு வலையமைப்பான மீனாட்சி லேப்ஸ்-ன் லோகோவை இங்கு இன்று வெளியிட்டனர். இசையமைப்பாளர் திரு. யுவன் சங்கர் ராஜா அவர்களால் இசையமைக்கப்பட்ட மீனாட்சி லேப்-ன் ஒரு விளம்பர திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரைக்குடி, கும்பகோணம், மதுரை, மயிலாடுதுரை, ராஜபாளையம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மீனாட்சி லேப்ஸ் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

‘வேகமே, விவேகம்’ என்ற பிராண்ட் ஸ்லோகனுக்கு ஏற்ப தமிழ்நாட்டு, குறிப்பாக இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் மற்றும் இம்மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வசிக்க க்கூடிய மக்களுக்கு வேகமான மற்றும் மிகவும் துல்லியமான பரிசோதனை சேவைகள் வழங்குவதே மீனாட்சி லேப்ஸ்-ன் நோக்கங்களாகும்.

லோகோ மற்றும் விளம்பரப்படம் குறித்து திரு. யுவன் சங்கர் ராஜா கூறுகையில், ஒரு வர்த்தக பிராண்ட் விளம்பர படத்திற்கு நான் முன்-எப்போதும் இல்லாமல் இசையமைத்திருப்பது இதுவே முதல்முறையாகும் மற்றும் ஒரு வர்த்தக பிராண்டின் லோகோ வெளியீடு நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதும் இதுவே முதன்முறையாகும். நான் இதை தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: ஒன்று, இந்த பிராண்ட் என்னுடைய சொந்த டவுனிலிருந்து வெளிவருகிறது. இரண்டாவதாக, மதுரை லேப்ஸ்-ன் வசதிகள் உலகத்தரம் வாய்ந்தவை. தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் மீனாட்சி லேப்ஸ்-ன் தரம் மிக்க மற்றும் வேகமான பரிசோதனை சேவைகளிலிருந்து பயன்பெறுவார்கள் என்பது நிச்சயம்,” என்றார்.

திரைப்பட இயக்குநர் திரு. இக்கே ராத்தே கூறுகையில், “புராசஸிங் மையங்கள் பெரும்பாலும் பெரு நகரங்களிலேயே அமைந்திருப்பதால் மிகவும் துல்லியமான மற்றும் வேகமான பரிசோதனை லேப் அதிகமாக அமைய வேண்டியது சிறிய நகரங்களில் இருக்கும் மக்களுக்கு மிகவும் தேவையானது. பரிசோதனை முடிவுகளுக்கு உடனடியாக அணுகல் கிடைப்பது என்பது நோயை தடுப்பதில், சிகிச்சைகளை மேம்படுத்துவதில், மீட்பை விரைவு படுத்துவதில் மற்றும் உயிர்களை காப்பதில் பெரும் தேவையாகும்,” என்றார்.

மீனாட்சி லேப்ஸ்-ன் அதிநவீன வசதிகள் குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் கூறுகையில், “துல்லியமான பரிசோதனை முடிவுகளுக்கு நாம் உயர் அளவிலான தன்னியக்கத்திற்கு சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மீனாட்சி லேப்ஸ்-ன் முக்கிய பரிசோதனை நடவடிக்கைகளின் மிகவும் குறைவான அளவே ஆட்களின் ஈடுபாடு இருப்பதை நான் பார்ப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இது, குறைந்த அளவே பிழைகள் நிகழும் சாத்தியத்தை மற்றும் விரைவான சேவை நேரத்தை உறுதிசெய்யும். மேலும், இந்த லேப்ஸ் பரிசோதனை கோரிக்கைகளிலிருந்து ரிப்போர்ட் கொடுப்பது வரை அனைத்து லேப் நடவடிக்கைகளிலும் உலகத்தரம் வாய்ந்த சிறந்த செயல்முறைகளை பின்பற்றுகிறது,” என்றார்.

அனைத்து வகைகளிலான மருத்துவ ஆய்வு பரிசோதனைகளை மேற்கொள்ள மீனாட்சி லேப்ஸ் முழுமையான வசதிகளையும், சாதனங்களையும் கொண்டிருக்கிறது. துல்லிய முடிவுகளை பெறுவதற்கு திறன்மிக்க கருவிகளையும் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற திறமையான தொழில்முறை பணியாளர்களையும் இது கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தென் மாவட்டங்களில் இன்னும் 10 அமைவிடங்களில் இச்சேவைகளை வழங்க பரிசோதனை மையங்களை அமைக்க மீனாட்சி லேப்ஸ் நடவடிக்கைகளை அமைக்கவிருக்கிறது. இது, சென்னை மற்றும் இதர பெரு நகரங்களிலும் மையங்களை அமைக்கவிருக்கிறது.

உடற்பரிசோதனைகள் மற்றும் ஆய்வு சோதனைகளில் இருக்கக்கூடிய மனஅழுத்தத்தை அகற்றுவதற்காக அனுபவம் மிக்க கவுன்சிலர்களை மீனாட்சி லேப்ஸ் பணியமர்த்தியிருக்கிறது. பரிசோதனைகளின் தேவை பற்றி புரிந்துகொள்ளவும் மற்றும் பரிசோதனை முடிவு அறிக்கைகளை புரிந்துகொள்ளவும் நோயாளிகளுக்கு இவர்கள் உதவுகின்றனர். இந்த ஒட்டுமொத்த செய்முறையையும் வெளிப்படையானதாகவும், சுமூகமானதாகவும் ஆக்குவதோடு, காத்திருப்பு காலத்தை மிக குறைவானதாகவும் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மீனாட்சி லேப்ஸ் எடுக்கிறது. மாதிரிகள் சேகரிப்பிற்கும் மற்றும் அறிக்கைகளை வழங்குவதற்கும் நோயாளிகளின் இல்லங்களுக்கே பணியாளர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளையும் மீனாட்சி லேப்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *