பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM

 

 

 

SRM உணவகமேலாண்மைகல்விநிறுவனம்

பொங்கல் – திருவிழா 2020

எஸ்ஆர்எம் உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் தன் மாணாக்கருக்குச் சிறந்த
கல்வி திறனை பயிலுவதற்கும், அனுபவிப்பதற்க்கும் ஏற்ற வாய்ப்புக்கள் அளிப்பதில்
மிகச் சிறந்து விளங்குகின்றது. உணவக மேளாலர்களாக வளர்ந்து வரும் மாணாக்கர்
பயன் பெறும் வகையில் பாரம்பரிய பண்டிகைகளையும் மற்றும் அனைத்து தேசிய
பண்டிகைகளையும் மிக விமரிசையாக கொண்டாடுகிறது

14.01.2020 அன்று பொங்கல் மிகச் சிறந்த முறையில் SRM ஹோட்டலிலும் SRM
உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளும் பொங்கல் மிக
சிறப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமரிசையாக புதிய
வடிவங்களுடன் 1995லிருந்து கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தமிழகத்தின்
கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் SRM உணவக மேலாண்மை கல்வி
நிறுவனத்தின் மாணாக்கர்கள் பாரம்பரிய நடனங்களான கிராமியநடனம்,
பரைமேளம்நடனம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளான உரி அடித்தல்,
கயிரிழுத்தல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளையும் நிகழ்த்தினர்

SRM ஹோட்டலில் மாவிலையாலும் தோரணங்களாலும் அலங்கரித்து, ஒரு
உழவனின் குடிசையை மத்தியில் வைத்து புதியதாக அறுவடை செய்த மஞ்சள்
கொத்து மற்றும் கரும்புகளின் இடையில் அலங்கரிக்கப்பட்ட புது மண்பானையில்
புதிய அரிசியில் வெல்லம் மற்றும் மணமிக்க நெய் கலந்து முந்திரி, திராட்சை,
ஏலக்காய் சேர்த்து பொங்கல் பொங்கி வர சூழ நின்ற அனைவரும் பொங்கலோ
பொங்கல் என்று ஆரவாரம் இட்டனர்.

SRM ஹோட்டலில் கண்களை கவர்ந்து, சுவை அரும்புகளை சுண்டி எழுப்பும்
வகையில் பல உணவு வகைகள் சமைக்க பட்டிருந்தது. தக்காளி சாறும் குறுமிளகு
தூள் நிறைந்த நெஞ்சு எலும்பு சாரும் அதனை பருகி சென்றவுடன் சைவ
உணவுகளாக நெல்லை பாவக்காய் பொரியல் அவரை பொரியல், செட்டிநாடு
மலக்கரி, சுரைக்காய் மசாலா, பீர்க்கங்காய் கூட்டு, வாழைக்காய் புட்டு, தக்காளி
ரசம், கதம்ப சாம்பார் மற்றும் பூசணிக்காய் மோர் குழம்பும் வைக்க பட்டிருந்தது.

அசைவ உணவுகளாக மிக சுவை மிக்க மதுரை மன குழம்பும், விருதுநகர் கோழி
பிரட்டலும் கொத்தமல்லி சாதம் தேங்காய் சாதம் மற்றும் வெள்ளை சாதத்துடன்
சேர்த்து சாப்பிடும் போது மனமும் வயிறும் செவ்வனே நிறைந்தது.

இனிப்பு வகைகளாக ரவை பாயாசம் சுவை மிக்க சர்க்கரை பொங்கல், மைசூர் பாகு,
லடு தேங்காய் பரபி சோமாஸ் மற்றும் மொட்டை பாக்கும் எதை சாப்பிடவேண்டும்
என்று திகைக்கும் அளவிற்கு வைக்க பட்டிருந்தது

எல்லோர் வாழ்க்கையிலும் செல்வம் மிக செழித்து வளம் பெற்று வாழ வேண்டும்
என்ற வாழ்த்துக்களோடு காலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணாக்கருக்குச்
பாராட்டுகளையும், பரிசுகளையும் எஸ்ஆர்எம் மேலாண்மை கல்வி நிறுவனத்தின்
இயக்குனர் Antony  வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *