கோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

 

 

 

கோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வயிறார உணவளிக்கும் பீட் ஆஃப் ஹாங்கர் குழு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஞாயிறுதோறும் மதியம் அருமையான அறுசுவை உணவு கொடுக்கும் சமூக சேவையை வழங்குகின்றனர் பீட் ஆஃப் ஹாங்கர் குழு.

இந்த குழுவினர் முதன் முதலில் வெளிநாட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு நல்ல சமூக சேவை செய்யலாம் என்ற மனதோடு ஆரம்பித்து சாலையோரம் இருக்கும் கூலி தொழிலாளிகளுக்கு இந்த உணவு அளித்தனர். ஆனால் அவர்களுக்கு இதன் அருமை தெரியவில்லை ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகளுக்கு தான் அவர்கள் ஆசைப்பட்டனர். அப்பொழுது யோசனை செய்து உண்மையான பசியுள்ளவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோயம்பேடு நோக்கி வந்தனர்.

இது குறித்து பீட் ஆஃப் ஹாங்கர் குழுவில் உள்ள நடிகர்விஜய், ஸ்ரீதர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பிரமிளா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இது நண்பர்களால் இணைந்து எடுக்கப்பட்ட முடிவு. பல இடங்களில் உணவளித்து அதன் அருமை தெரியவில்லை. இதை ஒரு யோசனை செய்து கோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வயிறார உணவு அளித்தால் அவர்கள் எப்படி இதை எடுத்துக் கொள்வார்கள் என்ற நிலையில் நாங்கள் இதனை முதன் முதலில் ஆரம்பித்தோம். ஆனால் வாராவாரம் நாங்கள் வருவதற்கு முன்பே சுமைதூக்கும் தொழிலாளர்கள் 250, 300 பேர் தயார் நிலையில் இருக்கும் நிலைமையை நினைத்து நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். அதனுடன் வேறு பல சமூக சேவைகளையும் செய்து வருகிறோம்.

சமீபத்தில் நாகப்பட்டினத்தில் ஒரு பள்ளி மாணவனுக்கு மூக்கு கண்ணாடி போட முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு அவருக்கு உதவி அளித்துள்ளோம். இதுபோல் திருச்சி, மதுரை போன்ற இடங்களில் நண்பர்கள் உதவியுடன் சில சமூக சேவைகளை செய்து வருகிறோம். இதனை கண்ட பிறகு பல நண்பர்கள் அவரவர்கள் கிராமங்களில் ஊர்களில் பஸ் ஸ்டாண்டில் வைத்து ஒரு 10, 15 பேருக்காவது பசியாற உணவளிப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதனை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஒரு அமைப்பாக ஏற்பாடு செய்து பல்வேறு நண்பர்களின் உதவிகளை பெற்று அதனை பெரிதாக செய்ய உள்ளோம் என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *