ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி வடசென்னை மாவட்டத் தலைவர் M.A.சாகுல்🥇AM TV

 

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் , தேசிய மக்கள் தொகை பதிவேடு ( NPR ) தேசிய குடியுரிமை பதிவைடு ( N. R.C..) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

நிறைவேற்றக் கோரியும் , இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் 25.01. 2020
சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்களை நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி நடைபெறுகின்றது.

இரண்டாவது கடற்கரை சாலை , பேரிஸ் கார்னர் பின்புறம் ( ICICI வங்கி அருகில் ) தொடங்கி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி வடசென்னை மாவட்டத் தலைவர் M.A.சாகுல் தலைமையில் நடைபெற்றது . இதற்கு மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது ஃபயாஸ் , தமீம், பெரோஸ் கான் மற்றும் காஜா ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர் . இப்பேரணியில் ஆண்கள் , பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகளில் தேசிய கொடி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்களை முழங்கினார் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் , N.P.R. N.R .C.சட்டங்களுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்திச் சென்றனர் . C.A.A. N.R.C , N.P.R. ஆகிய சட்டங்களுக்கு எதிராக மாநில மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கும் சட்டமாகும் . இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த குடியுரியை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சமுக அக்கறை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

இந்திய விடுதலைக்குப் பிறகு நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவது தற்போது தான் என்று குறிப்படும் அளவுக்கு இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்துள்ளன . குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்கப் போவதில்லை என்று உன்துறை அமைச்சர் அமீத்ஷா தெரிவித்துள்ளார் நாங்களும் எங்கள் போராட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்க மாட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக தான் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது . மத்தியில் ஆளும் பாஜக அரசு தங்களுக்கும் பெரும்பான்மை இருப்பதால் இந்த சட்டங்களை நாங்கள் அமல்படுத்துறோம் என்று கூறுகின்றது . ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான் பாஜக பெரும்பான்மையாகப் பெற்றுள்ளதே தவிர இந்திய மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறவில்லை . கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் வெறும் 37 சதவிகிதம் தான் . மீதமுள்ள 63 சதவிகித மக்கள் பாஜகவை எதிர்த்தே வாக்களித்திருக்கின்றனர் . நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாஜகவையும் , அதன் மதவெறிப் பிரச்சாரத்தையும் எதிர்க்கின்றர் . அதுதான் இப்போது எரிமலையாக வெடித்துள்ளது என்பது தன்னெழுச்சியான குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் நிருபணமாகியிருக்கன்றன . மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்ற தனது வாதத்தில் பாஜக உறுதியாக இருக்குமேயானால் இப்போது நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தத் தயாரா ?

நரேந்திர மோடி , அமீதஷா , ராஜ்நாத் சிங் போன்றோர் . இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று கூறி வருகின்றனர் . ஆனால் , வங்கதேச அகதிகள் வந்து விட்டார்கள் என்று ஒரு பாஜக எம்.எல்.ஏ.வின் பொய்யான வாட்சப் செய்தியை நம்பி முஸ்லிம்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வீடுகளை கர்நாடக போலீசார் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர் N.R.C. யைக் கொண்டு வருவதற்கு முன்பே இப்படிச் செய்யவர்கள் N.R.C. நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை . குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்ற மோடியின் வாதம் பொய் என்பதை நேற்று வெளியான ஹிந்து தமிழ் நாளிதழ் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது .

1950-ம் ஆண்டின் பாஸ்போர்ட் விதிகளையும் , 1946 -ம் ஆண்டின் வெளிநாட்டினர் சட்டத்தையும் திருத்தம் செய்து , பாஜக அரசு 2018 -ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அன்று ஓர் அரசாணையைப் பிறப்பித்துள்ளது . அதில் , இந்தியாவில் தங்குவதற்கான நீண்டகால விசாவை எல்.டி.வி பெறுவதிலிருந்து முஸ்லிகளுக்கும் , கடவுள் மறுப்பாளர்களுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது . அதாவது , பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் , சீக்கியர்கள் , பவுத்தர்கள், சமணர்கள், பார்சியர்கள் , கிறிஸ்தவர்கள் ஆகியோர் மட்டுமே நீண்டகால விசாவுக்கு ( எஸ்.டி.வி.) விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதன் மூலம் சிஏஏ.முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்ற பிஜேபியின் போலி வாதத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது .

பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக்கள் மதரீதியாகத் துன்புறுத்தப்படுகிறார்கள் , எனவே தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தோம் என்று மோடி கூறுகிறார் . ஆனால் வங்கதேசப் பிரதமர் ஷைக் ஹசீனா , எங்கள் நாட்டில் இந்துக்கள் , கிறிஸ்துவர் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாதோர் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்று தெரிவித்து மோடியின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றார்.பாகிஸ்தானைச் சார்ந்த இந்துக்களும், நாங்கள் பாகிஸ்தானில் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவில் லை என்று கூறி, பாஜகவின் பகல் பேஷத்தைக் கலைத்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் முன்னாள் குடியரசுத் தலைவர், ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை இங்கு இந்துக்கள் மட்டுமல்ல முஸ்லிம்கள் உட்பட எல்லா மதத்தினரும் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் என்று கூறியுள்ளனர். எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மத்திய அரசு கூறும் காரணம் அனைத்துமே போலியானவை என்பது இதன் மூலம் அம்பலமாகியிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *