மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை
மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை
சென்னையில் மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறையை அளிப்பவர் லண்டன் மருத்துவர் ஆண்ட்ரூ பேக். இவர் லண்டனில் இருந்து வந்து உள்ளார். மனநலம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை வருகிற 6, 7 , 8 ஆகிய தேதிகளில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து உளவியல் மருத்துவர் மற்றும் பாப்சிப் தலைவருமான டாக்டர் ஆண்ட்ரூ பேக் தலைமையில் நடைபெற உள்ள இப்பயிற்சிப் பட்டறையில் உளவியல் துறையில் மருத்துவ நிபுணர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த மூன்று நாள் மருத்துவ உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறையில் உலகில் ஆசியா உளவியல் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.
இந்த நிகழ்வில் பயிற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இதன் பயிற்சி நடைபெற உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ( ஹெல்ப் சைல்ட் அறக்கட்டளை ஒரு பிரிவு) இந்த நிறுவனத்தின் சார்பில் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிப் பட்டறையில் பயின்ற மருத்துவ மனநல மருத்துவர்கள் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிபிடி சிகிச்சை எடுப்பதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை பெறுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நரம்பு மருத்துவ உளவியல் நிபுணரும், அமைப்பு செயலாளர் டாக்டர் விருத்தகிரி நாதன் ஏற்பாடு செய்திருந்தார்.