ரெலா மருத்துவமனை மூதாட்டி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்றுக் கல்லீரல் பொருத்தி தனியார் மருத்துவமனை அசத்தல்
செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூரில் ரெலா இன்ஸ்டியூட் மற்றும் எம்.எஸ் மருத்துவமனையின் சாதனை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் ரெலா இன்ஸ்டியூட் மற்றும் எம்.எஸ் மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த ஒருவர் உடலிலிருந்து எடுத்த கல்லீரலை மூதாட்டி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்றுக் கல்லீரல் பொருத்தி தனியார் மருத்துவமனை அசத்தல்,
இந்த மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட திருச்சியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற 67 வயது மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மூளை சாவால் இறந்த ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று பிரபல மருத்துவர் முகமது ரெலா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் மாற்று கல்லீரலை பொருத்தினர் இதன் மூலம் தற்போது மூதாட்டி ஈஸ்வரி பூரண நலத்துடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் வடசென்னை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது இதுவே முதல் முறை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,