மஹிந்திரா நிறுவனம் நிலத்தடி நீரையும் மற்றும் நிலத்தடி நீர் மாசு ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கில் வாட்டர் வாஷ் முறையில் எம் ஈக்கோ வாஷ் (M – ECO WASH) என்ற முறையை பின்பற்ற டீலர்களிடம் அறிவுறுத்தியுள்ளது
மஹிந்திரா நிறுவனம் நிலத்தடி நீரையும் மற்றும் நிலத்தடி நீர் மாசு ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கில் வாட்டர் வாஷ் முறையில் எம் ஈக்கோ வாஷ் (M – ECO WASH) என்ற முறையை பின்பற்ற டீலர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
தற்பொழுது நடைமுறையிலுள்ள வாட்டர் வாஷ் முறையினால் ஒரு வாகனத்திற்கு குறைந்தது 260 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது . மேலும் தமிழகத்திலுள்ள 25000 மஹிந்திரா வாகனங்களுக்கு தோராயமாக ஒரு மாதத்திற்கு 65 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு மேலும் எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற நிலத்தடி நீர் கிடைக்க உறுதி செய்யும் வகையிலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அங்கீகரிக்கப்பட்ட டீலர் ஆன ஆட்டோமேட்டிக் மேனுஃபேக்ச்சுரர் பிரைவேட் லிமிடெட் தனது சாலிகிராமத்தில் உள்ள வாகன பராமரிப்பு பணியில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஈக்கோ வாஷ் முறையை தொடங்கியுள்ளது .
இந்த எம் ஈகோ வாஷ் (M – ECO WASH) முறையின் தொடக்க விழாவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி .கருப்பண்ணன் விருகை சட்டமன்ற உறுப்பினர் வி. .என் .ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர்.
இந்த விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு குறித்த அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் ஆட்டோமேட்டிக் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களால் உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பாக அதன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு மண்டல மேலாளர் செந்தில் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை பிரிவு மண்டல மேலாளர் ஹரி ஆட்டோ மோட்டிவ் மேனுஃபேக்ச்சுர் பிரைவேட் லிமிடெட் சார்பாக அதன் தலைமை செயல் அலுவலர் நாராயணன் , மணிசங்கர் , மையப் பிரிவு பொது மேலாளர்