அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி துறையில் பொறியாளராக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி நியமனம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி துறையில் பொறியாளராக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி நியமனம்
இந்திய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான தரச் சான்றிதழ் வழங்கும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அங்கமான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் (AICTE)  இதற்கான பயிற்சி வழங்கும் நிறுவனமாக திண்டுக்கல் பி எஸ் என் ஏ  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை நியமித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மார்க்க தர்ஷன் என்ற திட்டத்தின் அடிப்படையில் பி எஸ் என் ஏ கல்லூரி 12 அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் இனங்கண்டு முறைப்படி அவற்றை அரசின் தரம் மேம்பாட்டுக்குத்  தகுதிப் படுத்த பயிற்சி அளிக்கிறது திண்டுக்கல் வட்டாரத்தில் உள்ள 12 பொறியியல் கல்லூரிகளின் சார்பில் பிஎஸ்என்எல் கல்லூரியுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது 29 2 2020 சனிக்கிழமை பி எஸ் என் ஏ கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திண்டுக்கல் மதுரை தேனி என பல்வேறு பொறியியல் கல்லூரியின் சார்பாக அதன் முதல்வர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் கல்லூரி முதல்வர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மார்க்கதர்சன் திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சிவில் பொறியியல் துறை தலைவருமான பேராசிரியர் மகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் மூத்த அதிகாரி பேராசிரியர் திலிப் மால்கேடே சிறப்புரை ஆற்றிய போது (AICTE)  நெறியாளராகப்  பொறுப்பேற்றுள்ள பி எஸ் என் ஏ கல்லூரியின் சீரிய முயற்சியால் 12 கல்லூரிகளும் தர மேம்பாட்டு தகுதி சான்றிதழ் பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக (AICTE) தர மேம்பாட்டு சான்றிதழ் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்திய பி எஸ் என் ஏ கல்லூரியின் தலைவர் ஆர் எஸ் கே ரகுராம் இந்த மார்க்க தர்சன் திட்டத்தின் மூலம் பங்கு பெறும் பொறியியல் கல்லூரிகள் அனைத்துக்கும் மேலான சேவையை தொடர்ந்து அளிப்பதில் பி எஸ் என் கல்லூரி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *