நடனக்கலைஞரின் நம்பிக்கையை காப்பற்றிய காவேரி மருத்துவமனை

 

 

வளர்ந்து வரும் ஒரு நடனக்கலைஞரின் நம்பிக்கையை காப்பற்றிய பல்துறை மருத்துவ நிபுணர்குழுவினர்!

~ பையோமையோசைட்டிஸ் என்னும் நோயின் (Pyomyositis) தீவிர பாதிப்புக்கு உள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பத்து வயது குழந்தையை காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்குழுவினர் காப்பாற்றினர்

சென்னை, மார்ச் 2, 2020: சென்னையில் உள்ள பிரபல பன்னோக்கு மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைகளுக்கான முன்னணி மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, பையோமையோசைட்டிஸ் பாதிப்புக்குள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த ஒரு பத்து வயது சிறுமியைக் காப்பாற்றினர். காவேரி மருத்தவமனையை சேர்ந்த குழந்தை சிகிச்சைப் பிரிவு, எலும்பு சிகிச்சைப் பிரிவு, அவரச சிகிச்சைப் பிரிவு, தொற்று நோய்ப் பிரிவு மற்றும் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சைப் பிரிவு ஆகிய துறைகளை சார்ந்த பல்வேறு மருத்துவ நிபுணர்களின் கூட்டு முயற்சியால் அச்சிறுமி காப்பாற்றப்பட்டார்.

அசாம் மாநிலம் குவஹாத்தியை சேர்ந்த பெற்றோர்கள், நடனக்கலைஞராக வேண்டும் என்ற ஆசை கொண்ட தங்களது பத்து வயது மகளை, காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டு, அவர்களது சொந்த ஊரில் சிறுமியின் முழங்காலுக்கு மேலே பிளாஸ்டர் கட்டு (knee plaster cast) போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலில் கட்டு போடப்பட்டு ஏழு நாள் கழித்து, அதிக காய்ச்சலுடன் அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது அவருக்கு வலது காலில் வீக்கமும், தாங்க முடியாத வலியும் இருந்தது.

டீப் வெயின் த்ரோம்பாசிஸ் என்னும் நரம்பு பாதிப்பு இருப்பதாக அறிகுறிகள் தெரியவந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டாவது நாளில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படவே, அவரை குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள். சிறுமியின் வலது காலில் தோலின் நிறம் மாறவே, அது தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அது உயிருக்கும், காலுக்கும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது, உடல் நடுக்கம், சுவாசிக்க இயலாமை, மேசமான சிறுநீரக பாதிப்பு மற்றும் சீழ்பிடிப்பு என சிறுமிக்கு பல உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே சிறுமிக்கு உயிர் காக்கும் கருவிகள் மற்றும் அதி-நவீன ஆன்டிபயாட்டிக்ஸ் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்யும் பொருட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையினை மேற்கொண்டதில், சிறுமி தீவிர பையோமையோசைட்டிஸ் பாதிப்பிற்குள்ளாகி இருப்பது தெரியவந்தது. அதனால் முழங்காலை சுற்றியுள்ள திசுக்களை அகற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் எலும்பை சுற்றியிருந்த தசைகளின் திசுக்களில் நெக்ரோஸ் எனப்படும் செல் சிதைவு ஏற்பட்டிருந்தது. காலின் மேல் மட்டத்தில் உள்ள திசுக்கள் எதுவும் பாதிக்கப்படாமல், உள்ளே மட்டும் பாதிக்கப்பட்டிருந்தது மிகவும் அரிதான ஒன்றாகும்.

பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள், குழந்தை சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரு குழுவாக அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். வேக்குவம் (vacuum) சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சிதைவடைந்த திசுக்களை நீக்குதல், உயிரையும் காலையும் காப்பாற்றும் பொருட்டு ஸ்கின் கிராஃப்ட்டிங் சிகிச்சை என பல முக்கியமான அறுவைசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த மருத்துவ சிகிச்சைகள் உண்மையாகவே சிக்கலானதாகவும், அதிக நிபுணத்துவம் வாய்ந்த பொறுப்பான மருத்துவர்களுக்கே சவால் விடும் வகையிலும் இருந்தது. மருத்துவமனையில் இருந்த காலம் முழுவதிலும் அச்சிறுமி புன்னகையுடனேயே இருந்தார். மருத்துவர்களை, “நமஸ்தே டாக்டர்” என்றும், செவிலியர்களை “நமஸ்தே சிஸ்டர்” என்றும் வரவேற்றபடியே இருந்த சிறுமி, தனது விளையாட்டு செயல்களின் மூலமாகவும், புன்னகையின் மூலமாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவின் செல்லப்பிள்ளையாக மாறினார்.

தற்போது அச்சிறுமி மீண்டும் நடனமாடுவதைத் தொடர சென்றுவிட்டார். அந்த சின்னஞ்சிறு சிறுமியின் நடனமாடும் கனவை நனவாகவே நிலைக்கச் செய்ததில் காவேரி மருத்துவமனை பெருமைகொள்கிறது.

மருத்துவர் குழுவின் விபரம்: டாக்டர் திரு.லக்ஷ்மி பிரஷாந்த், குழந்தை மருத்துவ நிபுணர்; டாக்டர் திரு.V B நாராயணமூர்த்தி, மூத்த பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்; டாக்டர் திரு. சதீஷ் மணிவேல், மூத்த பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்; டாக்டர் திரு. அருள் மொழி மங்கை, மூத்த பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்; டாக்டர் திரு. விஜயலக்ஷ்மி B, மூத்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்; மற்றும் டாக்டர் திரு. ஸ்ரீதர் N, மூத்த தீவிர சிகிச்சை நிபுணர்.

காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர், டாக்டர் திரு. ஐயப்பன் பொன்னுசுவாமி அவர்கள் மருத்துவர்களின் சாதனை குறித்து பேசுகையில், “நடனக்கலைஞராக வேண்டும் என்ற கனவுடைய அந்த குழந்தையின் முகத்தில் புன்னகையை மீண்டும் கண்டது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. அதே நேரத்தில், காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சை மருத்துவர்களின் குழுவினயும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் அனைவரும் தங்களின் நிபுணத்துவத்தினை சரியான நேரத்தில் பயன்படுத்தி, குழந்தையை மீண்டும் புன்னகைக்கக் வைத்தார்கள். பாதிப்புக்குள்ளாகி ஆபத்தான நிலையில் இருக்கும் பலருக்கும் இது போன்ற வெற்றிகரமான சிகிச்சைகள் நம்பிக்கையை அளிக்கும்.”

பையோமையோசைட்டிஸ் எனப்படுவது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோய்த்தொற்றாகும். பெரும்பாலும் பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு, வயதானவர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களையே பாதிக்கும். (75% நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை தாக்கும்) இளம் வயதினரை இந்நோய் தாக்குவது மிக அரிதான ஒன்று. அதுவும் ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு சிறுமியை பாதித்தது அரிதினும் அரிதானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *