கீரைக்கடை.காம் இப்போது சென்னையில் ஆரம்பம்

 

 

கீரைக்கடை.காம் இப்போது சென்னையில் ஆரம்பம்

  • புத்தம் புதிய கிரீனி டிப் சூப் அறிமுகம்
  • 100-க்கும் அதிகமான கீரை வகைகள் வைக்கப்பட்டுள்ளன

 

சென்னை, மார்ச் 5 2020: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் தொடங்கப்பட்ட கீரைக்கடை.காம், 150-க்கும் மேற்பட்ட கீரை வகைகளை விற்பனை செய்கிறது. கோவை, மதுரை நகரங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது கீரைக்கடை.காம். இயற்கை விவசாயத்தில் இருந்து நேரடியாக வாங்கப்படும் கீரை, காய்கறி, பழங்களை சென்னை மக்களுக்கு விற்பனை செய்ய கீரைக்கடை.காம் சென்னை நோலம்பூரில் முதல் கிளையை திறந்துள்ளது. 

திறப்பு விழாவையொட்டி, கீரைக்கடை.காம் கிளையில் 100-க்கும் அதிகமான கீரை வகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, கீரை வகைகளின் பெயர்கள், மருத்துவ குணநலன்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஓர் முயற்சி எடுக்கப்படுகிறது. மேலும், கிரீனி டிப் எனப்படும் இயற்கை சூப் விற்பனை செய்யப்படுகிறது. அஷ்வகந்தா, மொரிங்கா மஞ்சள், வல்லாரை, முடகத்தான், தூதுவளை சூப் வகைகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இன்னும், பத்து வித சூப் வகைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.. 

இது குறித்து பேசிய கீரைக்கடை.காம் நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி திரு.ஶ்ரீராம் பிரசாத்.ஜி அவர்கள், “வெளிநாட்டு உணவுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது கலப்படம் அதிகரிக்க காரணமாகிறது. இதனால், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டி உள்ளது. இதற்கு, கிரீனி டிப் சூப் உதவியாக அமையும். கிரீனி டிப் பயன்படுத்துவது மிகவும் எளிது. கிரீனி டிப்பில் உள்ள ஃபில்டர் பேக் பயன்படுத்திய பிறகு எறிவது எளிது. மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்தாது தயாரிக்கப்பட்டுள்ளன. செயற்கை பொருட்கள் சேர்க்காமல், இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன. 100 மி.லி சுடு தண்ணீரோடு 1 டிப் சேர்த்து பயன்படுத்தலாம். மேலும், சிறுநீரக பாதிப்புள்ளவர்கள், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும் கிரீனி டிப் குடிக்கலாம்.  பயன்படுத்தும் வகையில் உப்பு சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ளது.. தேவைப்படும், வாடிக்கையாளர்களும் உப்பு சேர்த்து கொள்ளலாம். மேலும், இந்த தயாரிப்பு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளான் பல்கலை சார்பாக உணவு தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு (NABL ACCREDITED) சான்றிதழ் பெற்றுள்ளது.

“இயற்கை விவசாயிகளிடம் இருந்து காய்கறி, கீரைகளை வாங்கி விற்பனை செய்வது மட்டுமின்றி கூடுதலாகவும் சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கிரீனி டிப் விற்பனை வருமானத்திலிருந்து 1 சதவிதத்தை விவசாயிகளின் குழந்தைகள் கல்வி செலவுக்கு அளித்து உதவிட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

துணை நிறுவனர், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீராம் சுப்ரமணியம் அவர்கள் பேசும்போது, “இயற்கை விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் காய்கறி, கீரை வகைகளை சென்னை கிளையில் விற்பனை செய்ய உள்ளோம். மேலும், சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இங்கு விற்பனையாகும் அனைத்தும் 100% இயற்கையானது, விற்பனைக்கு வருவதற்கு நான்கு மணி நேரம் முன்னரே அறுவடை செய்யப்படுகிறது. பஞ்சகாவியா, ஜீவாமிர்தம் மற்றும் பல இயற்கை உரங்களையே எங்கள் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். தரமான பொருட்களை விற்கவே கவனம் செலுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் 5 – 8 வகை கீரைகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு 150-க்கும் அதிகமான கீரை வகைகள் விற்பனை செய்யப்படும். சர்க்கரை கட்டுப்பாடு, இரத்த அழுத்தம், இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு, கண், நிரம்பு பாதிப்புகளுக்கு கூட நலம் தரும் கீரை வகைகளும்  இங்கே கிடைக்கும்

மேலும், கீரைக்கடை.காமில் மூலிகை சூப், கீரை வடை, கீரை கொழுக்கட்டை, கீரை ஸ்மூத்தீஸ், கீரை பனியாரம் ஆகியவை மாலை நேரங்களில் கிடைக்கும் 

கீரைக்கடை.காம் முகவரி: 

நம்பர் 144, எச்.ஐ.ஜி நோலம்பூர் நான்காவது பிரதான சாலை, சென்னை. 

தொடர்புக்கு: 78249 50005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *