கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு

 

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப் 3232 –வின் அனைத்து ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன் இணைந்து சென்னை முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், மால்கள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொரானா வைரஸ் பற்றிய அறிவுரைகளையும் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்று ரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ-வின் தலைவர் டாக்டர்.தேவகுமார் தெரிவித்தார்.

மேலும் நான் நேரில் இந்த விழாவிற்கு தமிழக சுகாதார துறை இயக்குநரை அழைக்க செல்லும் போது, தமிழக சுகாதார துறை கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க முழு வீச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெரியவந்தது, இதேபோல் மும்முரமாக நமது ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் செயல்பட வேண்டும் என்று டாக்டர். தேவகுமார் கூறினார்.
தமிழக சுகாதரத்துறை கொரானா வைரஸ் பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டிய தடுப்பு முறைகள் பற்றி மிகத் தெளிவான வழிமுறைகளை உள்ளடக்கிய அறிவுரைகளை பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
போலியோவை இந்தியாவில் ஒழித்ததற்கு ரோட்டரி கிளப்பின் பங்களிப்பு முக்கிய காரணம். போலியோ நோய் இன்று இந்தியாவில் இல்லை என்ற நிலை ரோட்டரி இல்லை என்றால் கண்டிப்பாக சாத்தியம் இல்லை என்று சுகாதாரத் துறை உதவி இயக்குநர் திரு.சம்பத் கூறினார். போலியோ தடுப்பு மருந்தை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கி 2004-க்கு பிறகு போலியோ அற்ற இந்தியாவாக மாற்றிய ரோட்டரி கிளப் தற்போது கொரானா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும் முக்கிய பங்களிக்கும் என்பதில் தமிழக அரசுக்கு நம்பிக்கை உண்டு.
கொரானா வைரஸ் பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. 100 பேருக்கு கொரானா பாதிப்பு இருந்தால் 80 சதவீதம் பேருக்கு குறைந்த அளவு பாதிப்பு தான் இருக்கும். 15 சதவீதம் பேருக்கு மருத்துவ உதவியுடன் குணமாக்கி விட முடியும். 5% பேர் மட்டுமே தீவிர பாதிப்புக்கு உள்ளாவர்கள், மேலும் கொரானா வைரஸ் அதிக வெப்பநிலையை தாக்குபிடிக்க முடியாது. பொதுமக்கள் அனைத்து உணவுகளையும், முடிந்த வரை சூடாக சாப்பிடவும். ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் ரோட்டரி 3232 மாவட்ட கவர்னர் திரு.ஜி.சந்திரமோகன் கூறினார்.
கொரானா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகள் குளிர் பிரதேசமாகவே உள்ளது. மேலும் நம் நாட்டில் கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. வெயிலை கொரானாவால் தாக்கு பிடிக்க முடியாது, பொதுமக்கள் தண்ணீரை மிதமான சூட்டிலோ அல்லது கொதிக்க வைத்து ஆற வைத்தோ குடிக்க வேண்டும், காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் திரு.ஜி.சந்திரமோகன் கூறினார்.
விழாவில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ-வின் செயலாளர் திருமதி. தமிழ்செல்வி, சமுதாய சுகாதாரபணியின் இயக்குநர் டாக்டர்.சந்திரகுப்தா ஆகியோர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *