வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கியது
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கியது
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கும் வகையில், 11.3.2020 காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கணபதி ஹோம பூஜைகளில் கலந்துகொண்டு இந்த பூஜைகளை தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து இன்று மாலை “யாக சாலை பூஜைகள்” தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, நாளை காலை 8 மணியளவில், ஹோமம் நிறைவடைந்ததும், பாலாலய பிரதிஷ்டை நடைபெறும். அதனை தொடர்ந்து திருக்கோவிலின் திருப்பணிகள், முறைப்படி தொடங்கவுள்ளது.