முதுநிலை மற்றும் பயிற்சி மாணவர்களுக்காக 15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

 

 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் முதுநிலை மற்றும் பயிற்சி

மாணவர்களுக்காக 15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். உடலுறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள சிலைகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்,

பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்

அமெரிக்க சிறுவன் நலம். இன்று வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

அமெரிக்காவிலிருந்து வந்த சிறுவனுக்கு கோரோனா வைரஸ் பாதித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவனுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும் அவன் நலமாக உள்ளதாகவும் இன்று அவன் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் தெரிவித்தார்,

இதுவரை தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சர்வதேச விமான நிலையங்களில் 1, 31,793 பேரை கண்காணித்து உள்ளதாகவும் இதில்
1130 பேர் பொது சுகாதாரத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்,

72 நபர்களுக்கு எடுத்த சாம்பிளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்ல, இருவரின் மாதிரி முடிவுகள் நாளை வரும்.
ஒருவருக்கு மட்டும் பாதிப்பு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்,
இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக சுகாதாரத் துறை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்,

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறுப்பு வார்டுகள் ஏற்படுத்த வலியுறுத்தி உள்ளோம்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் பொறியாளர் நலமுடன் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

தேவைப்பட்டால் கொரோனா சோதனை மையம் கூடுதலாக அமைக்கப்படும்.

மாஸ்க்கின் மூலப்பொருள் சைனாவில் இருந்து வரும், தற்போது அதில் தேக்கம் உள்ளது.

மாஸ்க் விலையேற்றத்தை கட்டுப்படுத்த Drug control அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். மக்கள் வாங்குவது குறைந்தால் விலை தானே குறையும். எல்லோருக்கும் மாஸ்க், சானிடைசர் தேவையில்லை என்பதை தான் திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறோம். சோப் பயன்படுத்தி கை கழுவினால் போதுமானது.

கொரோனா பாதித்த நபர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். சிறப்பா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

தமிழகம் முழுக்க 300 சிறப்பு வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளதாகவும் இது போதுமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்,

ஜப்பான் நாட்டு உதவியுடன் 280 கோடியில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதுக்காக கட்டுமான பணி டெண்டர் விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்த அவர் இது தொடங்கினாள் தமிழகத்திலேயே மிக அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற பெயர் பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *