டாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்
டாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட்
சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்
சென்னையில் இயங்கும் “உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட்” கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவசமாகக் காய்கறிகளை தி.நகர் பகுதி மக்களுக்கு வழங்கியது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்டின் நிறுவனர் டாக்டர் சுனில் தலைமையில் இந்த உதவியை மக்களுக்கு வழங்குகிறது. டாக்டர் சுனில் அ.இ.அ.தி.மு.க.வின் மாநில. எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளருமாவார்.
5000 குடும்பங்களுக்கு ஒரு வார காலத்திற்குத் தேவையான 12 வகையான தரமான, புதிய காய்கறிகளுடன் பழங்களும் வழங்கப்பட இருக்கின்றன. இதற்கென அண்டை மாநிலங்களிலிருந்து இரண்டு லாரிகளில் காய்கறிகள் விசேஷ அனுமதியுடன் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் தக்காளி, வெங்காயம், கோவைக்காய், முருங்கைக்காய், முட்டைகோஸ், சுரைக்காய், பச்சைமிளகாய், இஞ்சி, மாங்காய், கொத்தமல்லி & கருவேப்பிலை, வாழைப்பழம் கிரிணிப்பழம் மற்றும் பலவகையான கீரைகள் ஆகியவை அடங்கும்.
தி.நகரில் முப்பாத்தம்மன் கோவில் அருகே உள்ள ராஜா பிள்ளை தோட்டத்தில் வாழும் மக்களுக்கு காலை முதலே காய்கறிகள் வழங்குவது தொடங்கப்பட்டு பின்னர், தனகோடி அம்மாள் தோட்டம், முத்துரெட்டி தெரு, பகவந்தம் தெரு, ராமேஸ்வரம் சாலை, தேனாம்பேட்டை ஹவுசிங் போர்டு நக்கீரன் நகர் திரு.வி.க. குடியிருப்பு மற்றும் தாமஸ் ரோடு ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது..
காவல் துறை உதவியுடன் வழங்கப்பட இருக்கும் இந்த காய்கறிகளைப் பெற விரும்புவோர் தங்கள் பாத்திரங்கள் அல்லது பைகளைக் கொண்டு வரவேண்டும். முகத்தில் மாஸ்க் அல்லது துணி கொண்டு மூடி, ஒருவருக்கொருவர் 5 அடி இடைவெளியிட்டு வரவேண்டும். இதனை மீறுபவர்களைக் காவல்துறை கட்டுப்படுத்துவார்கள் என்று டாக்டர் சுனில் தெரிவித்தார்.
உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் டாக்டர் சுனில் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளாக கல்வி, மருத்துவம், சட்ட உதவி தேவைப்படும் ஏழை மக்களுக்குத் தொடர்ந்து உதவி வருகிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாழ்வாதாரப் பொருட்களைச் சேகரித்து 28 இடங்களில் ஏழை மக்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.