உணவு வழங்குவதை தடுத்து நிறுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்கள் MLA. சேகர்பாபு

 

 

அதிமுக சார்பில் சென்னை

கொளத்தூர் தொகுதி முழுவதும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்குவதை தடுத்து நிறுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்கள் MLA. சேகர்பாபு மற்றும் திமுக வழக்கறிஞர் பிரிவு கிரிராஜன் ஆராஜகத்தில் ஈடுபட்டனர். தொலைபேசி மூலம் மிரட்டல் எதுக்கும் அஞ்சாத அதிமுக செயல்வீரர் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி*

சென்னை கொளத்தூர் தொகுதியில் 11 அம்மா உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் அதிமுக சார்பில் இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்க அதிமுகவைச் சேர்ந்த கொளத்தூர் டி. கிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை எடுத்தார். இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்புதலும் பெற்றார். அம்மா உணவக உணவுக்கு உண்டான நிதியை தானே ஏற்பதாக கிருஷ்ணமூர்த்தி அறிவித்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் ஆட்கள் அதிமுகவினர் இலவசமாக உணவு வழங்குவதை தடுத்து நிறுத்த சதி செய்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்திக்கு திமுகவினர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். மேலும் இலவசமாக உணவு வழங்கக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகளையும் திமுகவினர் மிரட்டியுள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கக் கூடாது என்று திடீர் என அறிவித்தனர். இதனால் இலவசமாக சாப்பிடலாம் என வந்த ஏழை எளிய மக்கள் திமுகவினரை திட்டிச் சென்றனர். அதிமுக இலவசமாக உணவு வழங்குவதை தடுத்து நிறுத்திய திமுக அராஜகத்தை கண்டு மக்கள் எரிச்சலடைந்தனர்.

இதனால் அதிமுகவினர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இலவசமாக உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனால் அயனாவரம் அம்மா உணவகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி,,,, கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *