துறைமுகம் தொகுதி எல்லீஸ் சாலையில் ஏழை எளியவர்களுக்கு முக கவசம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னைக் கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதி எல்லீஸ் சாலையில்
ஏழை எளியவர்களுக்கு
முக கவசம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் திரு பி கே சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்,
இதை தொடர்ந்து துறைமுகம் தொகுதி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளையில் பயிலும் பெண்களுக்கு உணவு பொருட்கள், முக கவசம், கிருமி நாசினி மற்றும் 500 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்.
முதல்வர் தினமும் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறார் ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சிகள் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது. எதிர் கட்சிகளின் குரலை அடக்கும் முயற்சியில் அரசு செயல்படுகிறது.
40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது நீங்கள் தரும் 1000 ரூபாய் மக்களுக்கு போதுமானது அல்ல 10000 ரூபாய் வழங்க வேண்டும்.
ஹைட்ரோ குளோரின் மாத்திரைகளை அமெரிக்கா மிரட்டியதும் மோடி வழங்கிவிட்டு தற்போது நமக்கு வரவேண்டிய டெபிட் கருவிகளை அமெரிக்கா பெற்றுவிட்டார்.
இரபிட் கருவிகள் வராததால் பலருக்கு சோதனை செய்யமுடியவில்லை எனவே இன்னும் பலரை சொதிக்காததால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சோதனையை அதிகம் செய்தல் எண்ணிக்கை அதிகரிக்கும்
மக்களை தண்டிக்கும் அதிகாரம் நீதிதுறைகுதான் உள்ளது. வெளியே வரும் மக்களை
காவல்துறையினர் தாக்குவது கண்டிக்கத்தக்கது.
7600 கோடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியை மதியவரசு எடுதிவிட்டனர். நாங்கள் எங்கள் தொகுதிக்கு தேவையான நிதியை எப்படி ஒதுக்குவது. இந்த நிதியை அதிக அளவு குஜராத் மாநிலத்திற்கு ஒதுக்கப்படுகிறது.
முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முன்பே கூறியவர் திமுக தலைவர் ஸ்டாலின். ஜனநாயகத்தில் எதிர் கட்சிகளின் குரலை கேட்டதால் தான் அனைத்து பிரட்சனைகளையும் அரசு அறிய முடியும் என்று கூறினார்.