எல்&டியின் கனரக பொறியியல் [L&T Heavy Engineering] பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு இணைவு

எல்&டி, பிரான்ஸில் அமையவுள்ள உலகின் மிகப்பெரிய அணு இணைவு திட்டத்தில் நிறுவுவதற்காக பெரிய கிரையோஸ்டேட் தளத்தை உருவாக்கியுள்ளது!! 

 

சென்னை, ஜுன் 10, 2020: எல்&டியின் கனரக பொறியியல் [L&T Heavy Engineering] பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு இணைவு உலையின் மிகப்பெரிய பகுதியான [single largest section of the World’s Largest Nuclear Fusion Reactor] 1,250 மெகா டன் எடையுள்ள கிரையோஸ்டேட் தளத்தை [Cryostat base]உருவாக்கி, சமீபத்தில் பிரான்ஸில் உள்ள அணு உலை கட்டடத்துக்கு எடுத்துச் சென்று வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது. இதன் மூலமாக, அணு பொறியியல் உலகில் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. 

பிரான்சின் தெற்கு பகுதியில் அமையவுள்ள உலை குழியில் கிரையோஸ்டேட் இணைப்பைத் தடையின்றி மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், ஊரடங்கின்போது லார்சன் & டூப்ரோவின் கனரக பொறியியல் பிரிவு கிரையோஸ்டேட் இணைப்பு கருவிகளை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. உலையின் வெற்றிடப் பகுதி மற்றும் மீக்கடத்தி காந்தங்களைச் சுற்றி, வெற்றிடமுள்ள இறுக்கமான கொள்கலனை இந்த கிரையோஸ்டேட் உருவாக்கும். அடிப்படையில், இது மிகப்பெரிய குளிர்சாதனமாக போன்று செயல்படும். 

இந்த உலைக்களமானது உலகின் மிகப்பெரிய எஃகு, உயர்-வெற்றிடம், கிரையோஸ்டேட் அழுத்த தனியறை உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட மிகப்பெரிய மற்றும் கனமான டோகாமாக்கினால் ஆனது. முடிவாக, உலையின் மீதமுள்ள பகுதிகளும் இதையே கொண்டிருக்கும்.

இது பற்றி சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை (ITER) அமைப்பின் பொது இயக்குனர் டாக்டர் பெர்னார்டு பிகட் (Dr Bernard Bigot, Director-General, ITER organization) பேசுகையில், “தற்போதுள்ள சிக்கலான சூழலுக்கு நடுவே உரிய நேரத்தில் கிரையோஸ்டேட் தள சீரமைப்புக் கருவிகளை கொண்டுவந்த சேர்த்தமைக்காக எல்&டிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த கிரையோஸ்டேட் தளமானது 2015-ம் ஆண்டு முதல் எல்&டியால் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் முடிந்தவரை முதல் பிளாஸ்மாவை உருவாக்கிடும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஐடிஈஆர் டோகாமாக் கட்டடத்தில் இதனை நிறுவுவது அவற்றுள் குறிப்பிடத்தக்க செயல்பாடாக அமைந்துள்ளது.  எல்&டி குழுவின் அசாதாரணமான அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளாலும், இந்திய அரசு அதிகாரிகளின் மதிப்புமிக்க ஆதரவினாலும் மட்டுமே கோவிட்-19 ஊரடங்கு காலத்திலும் இது சாத்தியமாகியுள்ளது. ஐடிஈஆரின் குறிக்கோள்களை எதிர்கொள்வதில் நம்பிக்கைக்குரிய கூட்டாளராக எப்போதும் எல்&டி திகழ்கிறது” என்று தெரிவித்தார். 

கிரையோஸ்டேட்டின் கீழ்பகுதி சிலிண்டர் 2019 மார்ச் மாதம் ஏற்கனவே எல்&டியால் அனுப்பப்பட்டது. 2020 மார்ச் மாதம் மேல்பகுதி சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, மேற்புற மூடிப் பகுதிகள் வரும் ஜூலை மாதம் ஹாஜிராவிலிருந்து அனுப்பப்படும். எல்&டி கனரக பொறியியல் திட்ட நோக்கமானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதலில் இந்த தயாரிப்பு குஜராத்தின் ஹாஜிராவிலுள்ள எல்&டி கிளையில் தனித்தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்டு, பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், பிரான்ஸில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதியில் தற்காலிக பணிமனை அமைக்கப்பட்டு அங்கு கிரையோஸ்டேட் பகுதிகள் அனைத்தும் ஒன்றாக இணைத்து பெரிதாக்கப்பட்டது. மூன்றாவதாக, டோகாமாக் உலை கட்டிடத்தின் உள்ளே கொண்டுசெல்லப்பட்டு கிரையோஸ்டேட் ஒன்றிணைக்கப்பட்டது. 

இந்த மிகமுக்கியமான சாதனை குறித்து எல்&டி கனரக பொறியியலின் நிர்வாக துணைத்தலைவர் மற்றும் தலைமையான திரு.அனில் வி பாரப் (Mr Anil V Parab, Executive Vice President and Head, L&T Heavy Engineering) பேசுகையில், “எதிர்காலத்துக்கான சர்வதேசத் திட்டமொன்றில் முதன்முதலாக ஐடிஈஆர் இறங்கியுள்ளது. மிகப்பெரிய வெற்றிடக் கலனான கிரையோஸ்டேட் 29.4 மீட்டர் விட்டம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 29 மீட்டர் உயரமும் 3,850 மெகா டன் எடையும் கொண்டது. இது போன்ற கடினமான திட்டத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டவிதம் எல்&டி கலாசாரத்தில் வேரூன்றியிருக்கிறது” என்றார். 

“உலக அளவில் உயர் தொழில்நுட்ப பரப்பில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தியதற்காக, எல்&டி கனரக பொறியியலின் அணுக் குழுவின் சார்பாக பெருமைப்படுகிறோம். எல்&டியின் உலகத் தரத்திலான உற்பத்தி திறன் மற்றும் பலமான பாரம்பரியத்துக்கான சாட்சி இது” என்று தெரிவித்தார் அனில் பாரப். 

இந்த மதிப்புமிக்க ஒப்பந்தத்தை 2012இல் எல்&டி கனரகப் பொறியியல் பிரிவு வென்றது. இந்த லட்சியமிக்க மிகப்பெரிய அறிவியல் திட்டத்துக்கான இந்தியப் பிரதிநிதியாக அணுசக்தி துறையின் ஒரு பிரிவான ஐடிஈஆர் இந்தியா உள்ளது. 

பிரான்ஸின் கராகாஷ் பகுதியில் அமையும் 20 பில்லியன் டாலர் மதிப்புமிக்க இந்த சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை (ITER) திட்டத்திற்கு இந்தியா உட்பட 7 நாடுகள் நிதியளித்துள்ளன. உலகின் மிகப்பெரிய ஆய்வுத்திட்டங்களில் ஒன்றான இது, இணைப்புச் சக்தியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் குறித்து செயல் விளக்கம் பெறுவதற்காகச் செயல்படுத்தப்படுகிறது. 

எல்&டி கனரக பொறியியல் பிரிவானது நவீனமான, முழுக்க ஒன்றிணைந்த, உலகத்தரத்திலான உற்பத்தி வசதிகளை ஹாஜிரா (சூரத்), பொவாய் (மும்பை) மற்றும் வதோதராவில் கொண்டுள்ளது. உலகம் முழுக்கவிருக்கும் சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் வாயு, பெட்ரோகெமிக்கல்ஸ், உரங்கள், அணுசக்தி நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் தீவிரமிக்க சாதனங்கள், அமைப்புகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது எல்&டியின் கனரக பொறியியல் வணிகம்.

 

நிறுவனத்தின் பின்னணி:

இந்தியாவைச் சேர்ந்த லார்சன்  &  டூப்ரோ பன்னாட்டு நிறுவனமானது தொழில்நுட்பம், பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் நிதிச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடுகிறது. 21 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வருவாய் பெற்று வருகிறது. உலகம் முழுக்க 30 நாடுகளில் செயல்படுகிறது. வலுவான, வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறை, உயர்தரத்திற்கான தொடர்ச்சியான தேடல் ஆகியன கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக எல்&டி இந்த வர்த்தகங்களில் தலைமையிடத்தை அடையவும் அதைத் தக்கவைக்கவும் உதவுகின்றன.   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *