வியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்

 

 

அமைச்சர் க.பாண்டியராஜன் பழங்கள் அடங்கிய பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினார்

சென்னை, ஜூலை.

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சிகிச்சை முடிந்து வீடி திரும்பியவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில் மருத்துவர்களும், மாநகராட்சி ஊழியர்கள் பழங்கள் அடங்கிய பூங்கொத்தை கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

சென்னையில் கொரோனா வளர்ச்சி விதிகம் குறைந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கின் பலன் தெரியும்.

கடந்த 23 ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ மையத்தில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு ஆக்சிஜன் பயன்பாட்டிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்சிஜன் பயன்பாடு யாருக்கும் தேவைப்படவில்லை.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் மொத்த பாதிப்பில் 30 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 67 சதவிகிதம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஸ்எம்எஸ் என்ற கோட்பாட்டில் சமூக இடைவெளி, முககவசம், கைகழுவதல் போன்றவற்றின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இதை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இன்னொரு கொரோனா அலை உருவாக கூடாது என்பதில் கவனமாக பணியாற்றி வருகிறோம்.

உணவே மருந்து அடிப்படையில் சித்த மருத்துவ மையங்களில் உணவு வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா மட்டுமல்லாமல் அனைத்து நோய்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க சித்த மருத்துவ முறை பரிந்துரைக்கப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

கொரோனா தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தொற்று உறுதியாகி சில தினங்களுக்குள் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு பயமில்லாத சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

இதில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், சித்த மருத்துவ டாக்டர் சாய்சதீஷ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் 9381811222

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *