டாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,

இந்தியாவின் முன்னணி கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி, லேப்ரோஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை லேப்ரோஸ்கோபியில் 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில் “டாக்டர். பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம்” மற்றும்“உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான மையத்தை” இன்று திறந்தது. ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஆர்.ஜி.சந்திரமோகன், சென்னை ஜெம் மருத்துவமனையில் இரண்டு மையங்களையும் திறந்து வைத்தார்.

 

பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து புற்றுநோய் நோயாளிகளின் பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு பிரத்யேக 24 x 7 புற்றுநோய் ஹெல்ப்லைன் (மொபைல் எண்: 9500200600 மற்றும் மின்னஞ்சல் cancerinfo@geminstitute.in) தொடங்கப்பட்டது. நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் நோயாளிகள் இந்த ஹெல்ப்லைனைப் பயன்படுத்தலாம். பல்வேறு பிரிவுகளுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை நிபுணர் குழு வழங்கும். புதிய புற்றுநோய் நோயாளிகள் பயமின்றி நம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக புற்றுநோயில் இருந்து மீண்டவர்களின் சான்றுகளை வழங்கி, தேவைப்பட்டால் ஜெம் அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளையும் வழங்கும். புற்றுநோய்க்காக இணைய வழியில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பரிசோதித்துக் கொள்ளும் வசதிகளையும் வழங்குகிறது.

 

லேப்ரோஸ்கோபி துறையில் 30 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டாடும் ஜெம் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், “இந்தியாவில் புற்றுநோய் இறப்பு விகிதத்தில் 4வது இடத்தில் இருப்பது ‘உணவுக்குழாய் புற்றுநோய்’ ஆகும். இதன் அறிகுறிகள் தெளிவற்றதாக இருப்பதால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறுதிகட்டத்தில் மட்டுமே அடையாளம் காணப்படுகின்றன. ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜெம் மருத்துவமனை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மையம் கீழ்காணும் நோய்களுக்கான லேப்ரோஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான அனைத்து அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ளது.

 

Upper Gastro Intestinal Cancer of Esophagus and Stomach

Cancers of Liver, Pancreas and Biliary Tract

Cancers of Colon, Rectum and Anus

Urogenital Cancer of Kidney, Prostate and urinary Bladder

Gyneacology Onoco surgery of Uterus cervix ovary

 

கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை மட்டுமே புற்றுநோய்க்கான ஒரே சிகிச்சை என பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து உள்ளது. பல வகை புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையே முதன்மை சிகிச்சையாக உள்ளது மற்றும் ஆரம்பகால புற்றுநோய்களை, பிரித்தெடுப்பதன் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிய ஸ்கிரீனிங் சிறந்த வழியாகும்,” என்றார்.

 

சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.அசோகன் கூறுகையில், “லேப்ரோஸ்கோபி செயல்முறை மூலம் வெற்றிகரமான 1000 உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை செய்து மைல்கல்லை எட்டியதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் தலைவர் டாக்டர் பழனிவேலு ஒரு தனித்துவமான நுட்பத்தை கண்டுபிடித்தார். இது ப்ரோன் பொஸிசன் டெக்னிக் ஆப் தோராகோலேப்ரோஸ்கோபிக் இசபெக்டோமி டெக்னிக் ஆகும். இது நோயுற்ற தன்மையைக் குறைத்து மருத்துவமனையிலிருந்து விரைவில் வெளியேற உதவும். இது மிகவும் பிரபலமான அணுகுமுறையாக மாறி இப்போது உலகளவில் பல மையங்களில் ஒரு நிலையான செயல்பாடாக பின்பற்றப்படுகிறது”, என்றார்.

 

அவர் மேலும் கூறுகையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள டாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் சிகிச்சை மையத்தில் கேஸ்ட்ரோஇன்டஸ்டைனல் கேன்சர் சம்பந்தமான நோய்களான ஈசோபேகல் கேன்சர், கேஸ்ட்ரிக் (ஸ்டொமக்) கேன்சர், கொலொரெக்டல் கேன்சர், பான்கிரியாடிக் கேன்சர் மற்றும் லிவர் கேன்சருக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ‘நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை’குறித்த பயிற்சி திட்டங்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இந்தத் துறை வழங்கும் ”என்றார்.

 

இந்த நிகழ்வில் ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி.செந்தில்நாதன் கூறுகையில், “இந்த புதிய மையத்தின் திறப்பைக் குறிக்கும் வகையில், உணவுக்குழாய் புற்றுநோய் குறித்து எங்கள் நிபுணர்களுடன் ஃபேஸ் புக் லைவ் மூலம் இன்று ஒரு மெய்நிகர் குழு விவாதம் நடத்தப்பட்டது. இதில் பொது மக்களும் பங்கேற்று அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனர். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பொது மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் ஒரு உறுப்பு / புற்றுநோய் குறித்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்ற குழு விவாதங்களை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்”, என்றார்.

 

அவர் மேலும் கூறுகையில் “டாக்டர். பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் தென்னிந்தியாவில் இந்த ஆண்டு முழுவதும் இலவச பரிசோதனை முகாம்களை நடத்தும். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், அதன் அறிகுறிகள், பல்வேறு குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகள் பற்றி மக்களுக்கு வலியுறுத்துவதே இந்த முகாமின் நோக்கமாகும்”, என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *