டிவிஎஸ் எமரால்ட்’ஸ் ஏட்ரியம் [TVS Emerald Atrium] சார்பில் க்ரீன் ஏக்கர்ஸ் [Green Acres] திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 100 வீடுகள் விற்பனை

டிவிஎஸ் எமரால்ட் நிறுவனம் தனது க்ரீன் ஏக்கர்ஸ் திட்டத்தின் கீழ் 10-85-5 என மூன்று கட்டமாக நிதி செலுத்தும் வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட ’டிவிஎஸ் எமரால்ட்’ஸ் ஏட்ரியம்’ என்ற புதிய பாதுகாப்பு வளாக குடியிருப்பை அறிமுகம் செய்கிறது!

~ டிவிஎஸ் எமரால்ட்’ஸ் ஏட்ரியம் [TVS Emerald Atrium] சார்பில் க்ரீன் ஏக்கர்ஸ் [Green Acres] திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 100 வீடுகள் விற்பனை~

சென்னை, 30 நவம்பர் 2021 : எமரால்ட் ஹாவென் ரியால்டி லிட் (டிவிஎஸ் எமரால்ட்) நிறுவனம் [Emerald Haven Realty Ltd (TVS Emerald)], டிவிஎஸ் க்ரூப் கம்பெனியின் [TVS Group Company] ரியல் எஸ்டேட் பிரிவு நிறுவனமாகும். இந்த நிறுவனம், தனது @க்ரீன் ஏக்கர்ஸ் [@GreenAcres]-ன் கீழ் புதிதாக தொடங்கியுள்ள டிவிஎஸ் எமரால்ட் ஏட்ரியம் – TVS Emerald Atrium) என்ற திட்டத்திற்காக, குறிப்பிட்ட காலம் மட்டுமே பொருந்தக்கூடிய ப்ரத்யேக நிதித்திட்டத்தை அறிவித்துள்ளது. @க்ரீன் ஏக்கர்ஸ் [@GreenAcres]-ல் கட்டமைக்கப்படும் சமூக மேம்பாட்டு திட்டமான டிவிஎஸ் எமரால்ட் ஏட்ரியம் என்பது கேட்டட் கம்யூனிட்டி எனப்படும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வளாக குடியிருப்பு திட்டமாக அமைகிறது. இது 18 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ‘டிவிஎஸ் எமரால்ட் க்ரீன் ஏக்கர்ஸ்’ சமூக மேம்பாட்டு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். குறிப்பிட்ட காலம் மட்டும் வழங்கப்படும், 10-85-5 என மூன்று கட்டமாக நிதி செலுத்தும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடு வாங்குபவர்கள் முன் பதிவின் போது 10 சதவீதம் பணம் செலுத்தி விட்டு, மீதமுள்ளவற்றில் 85 சதவீதம் தொகையை 2 ஆண்டுகள் கழித்து செலுத்தலாம். விற்கப்படும் வீட்டின் பணிகள் முடிவடைந்த பிறகோ அல்லது ஜனவரி 24-ம் தேதி என இதில் எது முதலில் வருகிறதோ அப்போது பணத்தை செலுத்த வேண்டும். மீதமுள்ள 5 சதவீதம் தொகையை வீட்டில் குடியேறும் போது செலுத்தலாம்.

குறிப்பிட்ட காலம் மட்டும் பொருந்துகிற வகையில் வரையறுக்கப்பட்ட இந்த நிதித்திட்டமானது வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு, மிகுந்த அக்கறையுடன் உருவாக்கப்பட்டதாகும். 2 ஆண்டுகள் வரை வீட்டுக் கடனை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் வீடு வாங்குபவர்களுக்கு பணம் செலுத்துவதில் ஒரு நிம்மதியளிக்கும் செளகரியமான வாய்ப்பை அளிக்கிறது. இந்த திட்டம் 15 டிசம்பர் 2021 வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

டிவிஎஸ் எமரால்ட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவர், ஸ்ரீராம் ஐயர் (Sriram Iyer, President & CEO, TVS Emerald) கூறுகையில், “வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு, மிகுந்த அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எங்களது டிவிஎஸ் எமரால்ட் ஏட்ரியம் என்ற புதிய திட்டத்திற்கு எதிர்பார்த்தைவிட அதிகளவில் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். எனவே இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும், வீடு வாங்குபவர்களுக்கு சிறப்பான மதிப்பை அளிக்கவும், நாங்கள் இந்த ப்ரத்யேக நிதி திட்டமாக, மூன்று கட்டமாக நிதி செலுத்தும் 10-85-5 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். டிவிஎஸ் எமரால்டில், பல்வேறு நிதி பொறுப்புகளை கொண்ட, வீடு வாங்க விரும்புபவர்களின் வலி மிகுந்த அம்சங்களை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆகவே தான், நாங்கள் இந்த திட்டத்தை வழங்குகிறோம். இதில், வீட்டை முன்பதிவு செய்த நாளிலிருந்து வாடிக்கையாளர் 2 ஆண்டுகள் வரையிலும் வீட்டுக் கடன் வாங்கவோ அல்லது நிதி சுமையை சுமக்கவோ வேண்டிய அவசியம் இல்லை, இதனால் முன் மாதாந்திர தவணை வாயிலாக சுமார் ரூ.6 லட்சம் வரை சேமிப்பை உறுதி செய்து கொள்ள முடியும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ரியல் எஸ்டேட் என்பது ஒரு மதிப்பு மிக்க சொத்து, எனவே வீடு வாங்குபவர்கள் அதற்காக வாழ்நாள் முழுவதும் கடன் வாங்க தயாராக உள்ளனர். வாழ்நாளில் எடுக்கப்படும் இந்த முக்கிய முடிவுக்காக, வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சுமையின்றி அவர்களுடைய வீட்டை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிம்மதியை அளிக்கிறோம். இந்த தனித்துவமான வரையறுக்கப்பட்ட கால நிதி திட்டத்தை சென்னையில் முதன் முதலில் சந்தைக்கு கொண்டு வந்த நிறுவனம் டிவிஎஸ் எமரால்ட் நிறுவனமாகும். இதன் மூலம் வீடு வாங்கும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

ஜேஎல்எல், இந்தியா, நிறுவனத்தின் ரெசிடென்சியல் சர்வீசஸ் பிரிவின் தமிழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சிவ கிருஷ்ணன் (Siva Krishnan, Managing Director – Tamilnadu & Head – Residential Services, India, JLL) கூறுகையில், “இந்த தனித்துவமான ரியல் எஸ்டேட் திட்டத்தின் நோக்கம் என்பது, இந்த திட்டத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படும் வரை வட்டி சுமையை குறைப்பதன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு மன நிம்மதியுடனான பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இந்த திட்டம் வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை குறைப்பதுடன் சரியான நேரத்தில் வீடுகளை பில்டர் டெலிவரி செய்வதையும் உறுதி செய்கிறது. வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதை முடிவு செய்ய காத்திருந்து, சென்னையில் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். இது வெளிநாடுகளில் வசிக்கும், வீடு வாங்க விரும்பும் முதலீட்டாளர்களையும் நிச்சயம் ஈர்க்கும்” என்றார்.

2.5 ஏக்கர் பரப்பில் மிகப்பிரம்மாண்டமாக பரந்து விரிந்துள்ள டிவிஎஸ் எமரால்ட் ஏட்ரியம் அட்டகாசமான 4 டவர்களை கொண்டுள்ளது, 567 சதுர அடி தொடங்கி 845 சதுர அடி வரையிலான விசாலமான 2BHK மற்றும் 3 BHK அபார்ட்மெண்டுகளை கொண்ட 8 அடுக்கு தளங்களை கொண்டதாகும். வீடுகள் ரூ.49 லட்சத்தில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கும். இந்த திட்டமானது, 10,800 சதுர அடியில் சென்ட்ரல் ஏட்ரியம், பல்வேறு பயன்பாட்டுக்கான அரங்கம், சிட் அவுட் பகுதி, குழந்தைகள் விளையாடும் பகுதி, பேட்மின்டன் மைதானம், நடைபயிற்சி தடம், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், பூந்தோட்டம், கிரிக்கெட் மைதானம், ஸ்கேட்டிங் வளையம், யோகா கூடம், திறந்த வெளி அரங்கு, வெளிப்புற திரையரங்கு வசதிக்கான சிறப்பம்சம் கொண்ட சுவர் [central atrium, multi-purpose hall, sit out area, kids play area, badminton court, jogging track, outdoor gym, flower garden, cricket pitch, skating rink, yoga lawn, open amphitheatre, feature wall with outdoor theatre facility] உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.

பெருங்களத்தூர் அருகே அமைந்துள்ள இந்த டிவிஎஸ் எமரால்ட் ஏட்ரியம் மிகப் பெரிய ஐடி பூங்காக்களுக்கு மிக அருகிலும், கல்வி நிலையங்கள், வண்டலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலும் அமைந்துள்ளது, மேலும் முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களான கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம், பெருங்களத்தூர் ரயில் நிலையம், வண்டலூர் சந்திப்பு ஆகியன 5 கிமீ சுற்றளவில் அமைந்துள்ளன. ஏற்கனவே 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்டுள்ள இந்த திட்டம் பசுமை ஏக்கர் (Green Acres) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த திட்டம் பசுமையான இயற்கையை ரசிக்கும் வகையில் 2 ஏக்கர் பரப்பில் மிகவும் கவனத்துடனும், அதிக அக்கறையுடனும் பராமரிக்கப்படும் 3 தோட்டங்கள், 4 பூங்காக்கள், ஆயிரத்துற்கும் அதிகமான மரங்கள் மற்றும் தாவரங்களை கொண்டுள்ளது. இந்த திட்டம் மிகவும் செம்மையாக திட்டமிடப்பட்டு பல்வேறு சுகாதார மற்றும் உடல் நலத்துக்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

TN/01/Building/0194/2021 என்ற RERA Number பெற்று இந்த திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *