ஏசிக்ஸ் (ASICS) பிராண்ட் அத்லெட்டான ஜோஷ்னா சின்னப்பா லைட்-ஷோ கலெக்ஷனை சென்னையில் வெளியிட்டார்

 

ஸ்போர்ட்ஸ் செயல்திறன் பிராண்டான ஏசிக்ஸ் (ASICS),

சென்னையில் இன்று இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையும் பிராண்ட் அத்லெட்டுமான ஜோஷ்னா சின்னப்பா முனனிலையில் லைட்-ஷோ கலெக்ஷனை வெளியிட்டது. ஏசிக்ஸ் வழங்கும் சமீபத்திய லைட்-ஷோ கலெக்ஷனில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த, விளையாட்டு வீரர்களுக்கான ஷூவை வெளியிட்டு ஜோஷ்னா இந்த நிகழ்வை சிறப்பித்தார்.

விளையாட்டு வீரர்களின் ஓடும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட லைட்-ஷோ கலெக்ஷன், குறைந்த ஒளி நிலையில் ஓடும் போது 360 டிகிரி பார்க்கும் திறனை வழங்குகிறது. மேலும், கண்ணை கவரும் பிரகாசமான வண்ணங்கள் மற்றும் பிரதிபலிப்பு தன்மைகள் கொண்ட இந்த ஷூக்கள், குறைந்த வெளிச்சத்தில் ஓடும்போது பார்க்கும் திறனை அதிகரிப்பதுடன் வீரர்கள் பாதுகாப்பாகவும் அதிக நம்பிக்கையுடனும் உணர உதவுகின்றன.

ஏசிக்ஸ் இந்தியா & தெற்காசியா நிர்வாக இயக்குனர் திரு. ரஜத் குரானா கூறுகையில், ““ஓடுதல் என்பது தொடர்ந்து பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் புதிய லைட்-ஷோ கலெக்ஷன், அனைத்து நிலைகளிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பாகவும் திறமையாகவும் பயிற்சி பெற உதவுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் காட்டுகிறது. புதிய ரெட்ரோ-ரெஃப்லெக்டிவ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் வீரர்களுக்கு ஆற்றல் மற்றும் நம்பிக்கையை வழங்குவதற்காக இந்த கலெக்ஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையை மேம்படுத்தி பகல் அல்லது இரவு என எந்த நேரத்திலும் தங்கள் பயிற்சியை வரம்பிற்குள் வைத்திருக்க அவர்களுக்கு உதவுகிறது. தென்னிந்தியா ஏசிக்ஸ் பிராண்டின் முக்கிய யுக்தியுடன் கூடிய சந்தையாகும். மேலும் சென்னையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய சலுகைகளை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம். புதுமையான ஸ்போர்ட்ஸ் தயாரிப்புகள், மற்றும் தொழில்நுட்பங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து நுகர்வோரும் தங்களின் இலக்குகளை அடைய உதவும் வகையில் இருப்பதாக ஏசிக்ஸ் உறுதியாக நம்புகிறது. மேலும் லைட்-ஷோ அத்தகைய தயாரிப்புகளில் ஒன்றாகும்’’ என்றார்.
இந்திய தொழில்முறை ஸ்குவாஷ் வீராங்கனையும், ஏசிக்ஸ் பிராண்ட் அத்லெட்டுமான ஜோஷ்னா சின்னப்பா சென்னை அண்ணாநகரில் உள்ள ஏசிக்ஸ் ஸ்டோரில் கலெக்ஷனை வெளியிட்டு பேசுகையில், “நமக்கு தெரிந்த உலகம், கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்டது. மக்களை இணைக்கவும், தயாரிப்புகள் செயல்படவும் தொழில்நுட்பம் ஒரு நரம்பு மையமாக மாறிவிட்டது. விளையாட்டுகளின் உருமாறும் ஆற்றலின் மூலம் நுகர்வோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஏசிக்ஸ் பிராண்டின் அர்ப்பணிப்பு, அவர்களின் அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளுடன் தொடங்குகிறது’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “வரவிருக்கும் போட்டிகளுக்காக நான் வழக்கமாக பகல் நேரத்தில் ஸ்குவாஷ் விளையாட்டு பயிற்சியை செய்வதில் மும்முரமாக இருக்கிறேன். எனவே அதிகாலை அல்லது இரவு நேரத்தின் போது மட்டுமே எனது தனிப்பட்ட உடற்பயிற்சிகளை செய்ய முடியும். லைட்-ஷோ என்பது ஒரு கண்டுபிடிப்பு ஆகும். இது உலகெங்கிலும் உள்ள பல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளின் எந்த நேரத்திலும் தங்கள் தனிப்பட்ட ஓடுதல் இலக்குகளை அடைய உதவும். ஏசிக்ஸ் உடன் இணைந்திருப்பதிலும், இளம் விளையாட்டு வீரர்கள் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களின் திறனை அடைய உதவும் வகையிலான அதன் நோக்கத்தை ஆதரிப்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்’’ என்றார்.
லைட் ஷோ ஷூ கலெக்ஷன் இப்போது சில்லறை விற்பனை கடைகளிலும் ஏசிக்ஸ் இந்தியா இணையதளத்திலும் ரூபாய் 9,999 என்ற விலையில் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *