மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு சைக்கிள் பியூர் வழங்கும் கல்வி உதவித்தொகைகள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு சைக்கிள் பியூர் வழங்கும் கல்வி உதவித்தொகைகள்
~ ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் திட்டம், 40 இளம் மாணவிகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் ~
#சைக்கிள் #பியூர் #அகர்பத்தி தயாரிப்பாளரும் மற்றும் #ஊதுபத்திகள் தயாரிப்பு மற்றும் #ஏற்றுமதியில் #இந்தியாவின் #மிகப்பெரிய #நிறுவனமாகவும் திகழும் N. ரங்கா ராவ் & சன்ஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள 40 #மாற்றுத்திறனாளி பெண் மாணவிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள ஐந்து ஆண்டுகள் காலஅளவிற்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டம் தொடங்கப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. 12 முதல் 17 ஆண்டுகள் வயதிற்கு இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் மாணவிகள் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறுவார்கள்.
இம்மாநகரில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பு நிகழ்வின்போது சைக்கிள் பியூர் அகர்பத்தியின் நிர்வாக இயக்குனர் திரு. அர்ஜுன் ரங்கா கலந்துகொண்டு மொத்தமுள்ள 40 ஸ்காலர்ஷிப்களில் 8-ஐ இதற்கான தகுதியுள்ள மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கினார். இம்மாநிலத்தில் மாற்றுத்திறனுள்ள இளம் மாணவிகள் எஞ்சியுள்ள கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். “நமது நேரம் இப்போது – நமது உரிமைகள், நமது எதிர்காலம்” என்பது இந்த ஆண்டுக்கான சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. உலகமெங்கும் அனுசரிக்கப்படும் இந்த தினத்தை, மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தின் மூலம் N. ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம், தனது பங்களிப்பை வழங்கி அக்கொண்டாட்டத்தில் இணைந்திருக்கிறது.
இந்நிகழ்வின்போது K.S. சுசித்ரா, சதீஷ் குமார், வித்யா மோகன், ரிய