இந்தியாவின் முதல் கத்தி இல்லாத மூளை அறுவை சிகிச்சை MRgFUS-ஐ – அறிமுகப்படுத்தியது
கை, கால் நடுக்குவாதத்திற்கு பக்க விளைவுகளின்றி ஒரு துல்லியமான சிகிச்சை முறை MRgFUS – தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறிமுகம்
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர், இந்தியாவின் முதல் கத்தி இல்லாத மூளை அறுவை சிகிச்சை MRgFUS-ஐ – அறிமுகப்படுத்தியது. இது எசென்ஷியல் ட்ரெமர் (Essential Tremors) மற்றும் நடுக்கம் ஆதிக்கம் செலுத்தும் பார்கின்சன் நோய் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பமாகும்.
நடுக்குவாத நோய் பொதுவாக 40 வயதிற்கு மேல் உள்ளோரை பாதிக்கிறது. நடுக்கு வாதத்தை ஆங்கிலத்தில் Parkinson’s Disease என்று சாதாரணமாக குறிப்பிட்டாலும் அது அல்லாமல் பல காரணங்களால் கை,கால் நடுக்கம் ஏற்படும். இவ்வகை நோய்களில் எசென்ஷியல் ட்ரெமரும் (Essential Tremors) அடங்கும். கடந்த 50 வருடங்களுக்கு மேல் நடுக்குவாத நோய்க்கு மருந்துகள் மட்டுமே தீர்வாக அமைந்திருந்தன. அறுவை சிகிச்சை மூலம் சில நடுக்கு வாத நோய்கள் குணப்படுத்தப்பட்டாலும் அதன் பக்க விளைவுகள் அதிகமாக இருந்ததை கொண்டு அவ்வளவாக அறுவை சிகிச்சைகள் பயன்படுத்தப்படவில்லை. கடந்த 10 – 12 வருடங்களாக உலகெங்கும் MRI guided Ultra Sound புதிய சிகிச்சை முறை இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புதிய தொழில்நுட்பம் குறித்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கூறியதாவது, “மிகவும் துல்லியமாக எந்தவித பக்க விளைவுகளுமின்றி இந்த சிகிச்சை முறை கையாளப்படுகின்றது.MRI ஸ்கேன் மூலம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) பயன்படுத்தி அல்ட்ரா சவுண்ட் (நுண்ணலைகள்) கொண்டு இந்த சிகிச்சை முறை மூலம் நடுக்கு வாதம் முற்றிலுமாக குணப்படுத்தமுடிகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் பல வருடங்களாக இருக்கும் கை, கால் நடுக்கம் 2 அல்லது 3 மணி நேரங்களில் முழுவதுமாக குணப்படுத்தப்படுகிறது”.
“மேலும் ஆச்சரியத்திற்குரியது என்னவென்றால் இந்த சிகிச்சை முறையில் கத்தியோ அல்லது மயக்க மருந்துகளோ பயன்படுத்துவதில்லை. அல்ட்ரா சவுண்ட் (நுண்ணலைகள்) மூலம் இந்த சிகிச்சை செய்யப்படுவதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இந்த முறை சிகிச்சை தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் அறிமுகப்படுத்தப்பட்டு பல நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர்” என்று கூறினார்.
இம் மருத்துவ சிகிச்சையை ராயல் கேர் மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.K.விஜயன் மற்றும் டாக்டர்.V.அருள்செல்வன் சிறப்பாக அளித்து வருகின்றனர். இப்படி ஒரு வியத்தகு சிகிச்சை முறை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும்.