கிம் ஜாங் நம் கொலையில் இண்டர்போலின் உதவியை நாடும் மலேசியா
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் -இன் ஒன்றுவிட்ட சகோதரரின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு வட கொரியர்களைத் கைது செய்ய அதிகாரபூர்வமாக எச்சரிக்கை நோட்டிஸ் ஒன்றை பிரசுரிக்கவேண்டும் என்று மலேசியா, சர்வதேச போலீஸ் முகமை, சர்வதேச போலிஸ் அமைப்பான, இண்டர்போலை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வாரம் கோலாலம்பூர் விமானநிலையத்தில் நடந்த ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலில் கிம் ஜாங் நம் நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த இரு பெண்களும், வடகொரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொலை தொடர்பாக மேலும் ஏழு பேரைப் போலிஸார் தேடிவருகின்றனர்.
இந்த ஏழு பேரில் நால்வர், கொலை நடந்த அன்றே மலேஷியாவை விட்டு வெளியேறிவிட்டதாக மலேசிய காவல்துறை கூறுகிறது.
வடகொரிய தூதர் ஒருவர் உட்பட மீதமுள்ள மூன்று சந்தேக நபர்கள் இன்னமும் மலேசியாவில் தான் இருக்கின்றனர் என்று கருதப்படுகிறது.