வேன் நிறுத்தம் நுழைவு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்வதற்கு சிறப்பு கட்டணம் ரூ. 100 முதல் 2000 வரை அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில்க்கு இன்று (13.5.2018) சென்றோம். திருசெந்தூர் முருகன் கோயிலில் வேன் நிறுத்தம் செய்வதற்கு நுழைவு கட்டணம் ரூ. 75 வசூலிக்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் வேன் நிறுத்தம் நுழைவு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்வதற்கு சிறப்பு கட்டணம் ரூ. 100 முதல் 2000 வரை அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திருச்செந்தூர் முருகன் கோயில் இந்து அறநிலையத்துறை மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் அன்புடன் நெல்லை மணி சமூக ஆர்வலர்.