கடத்தி வரப்பட்ட 220 கிலோ கஞ்சா ஆந்திராவில் பறிமுதல்
ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவையில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விநியோகம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னியம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது அதில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 110 பொட்டலங்களில் இருந்த சுமார் 220 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவைக் கடத்தி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த பாலாஜி, தேனியைச் சேர்ந்த குபேரன் ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஜீப்பில் பல பதிவெண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் இருந்தன.