விமான வெடித்தது மோதல் சத்தத்துடன் மோதியதால் பரபரப்பு
துருக்கியில் விமான நிலையத்தில் விமானங்கள் மோதல்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அட்டார்டக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் சீயோல் நகருக்கு 222 பயணிகள், விமான பைலட்டுகளுடன் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது ஓடுதளத்தில் இருந்து சென்ற போது, வலதுபுற ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிரந்த மற்றொரு விமானத்தின் பின்புற இறக்கையை இடித்து விட்டு சென்றது. வெடிவெடித்தது போன்ற சத்தத்துடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.மோதிய வேகத்தில் விமானத்தின் வலது புற இறக்கை தீப்பிடித்தது.உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.விமானங்கள் மோதிக்கொண்ட காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி.கேமிராவிலும் பதிவாகி சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.