அமைச்சர் PROக்கு, TUJ தலைவர் கண்டனம்.. 

உலகமெங்கும் இணையதளம் என்பது உடலுடன் கூடிய உயிர் போல் ஒன்றாகிவிட்டது.

தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் தங்களது செய்திகளை உடனுக்குடன் இணையத்தில் தான் வழங்கிவருகிறது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தனது கட்சிக்கு இணையதளம் மூலம் சில மணி நேரங்களில் பல லட்சம் தொண்டர்களை இணைத்து சாதனை படைத்தார். இணையத்தளத்தின் மூலம் தான், உடனடி செய்திகளை அறிந்து துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்பொழுது சிறு பத்திரிகையாளர்கள் இணையதள ஆன்லைன் மீடியா மூலம் தங்களது பதிவுகளை, நேரம் காலம் பார்க்காமல் மக்களுக்கு செய்திகளை வழங்கி வருகின்றனர்.

அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் மக்களுக்கு செய்த நலன்களை இணையத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்சப் என உடனடியாக தங்களது சேவைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு இணையத்தில் தான், செய்திகள் மக்களிடம் உடனடியாக சென்றடைகிறது.

அப்படிப்பட்ட இணையதளத்தை மூலமாக கொண்டு சிறு பத்திரிகையாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் எங்கெல்லாம் நடக்கிறது என்பதை கூறும் மிகப்பெரிய பொறுப்பு, மக்கள் செய்தித்தொடர்பு அதிகாரிக்கு உள்ளது. 

அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும் தலைவர்கள், தங்களது செய்திகளை உடனுக்குடன் வழங்க, தனக்கென ஒரு PRO வை நியமித்துள்ளார்கள். 

அவர்களில் பலர் நிருபர்களை மதிப்பவர்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் PRO திவாகர் போன்ற சிலர், நிருபர்களை கேவலமாக நடத்தி, பிழைப்பு நடத்துபவர்கள்.

இணையதள பத்திரிக்கையாளர்களை மதிக்க தெரியாத திவாகர் போன்ற PRO வை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்தி பதிவு செய்யப்பட்டது.

இதில் தவறு ஏதும் இருந்தால், சட்டத்தை நாடவேண்டிய திவாகர், ஒரு ரவுடி போல கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். இது அரசுக்கு தான் கலங்கம்.

கொலை மிரட்டல் விடும் ரவுடி திவாகருக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் அவர்கள் தனது கண்டனத்தை முதலாக பதிவு செய்துள்ளார். 

அவருக்கு ஆன்லைன் மீடியா நிருபர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.

பெண் சம்மதம் இல்லாமல் #MeTo நடக்குமா? பிரேமலதா கேள்வி. 

மீ டு’ இயக்கம் மூலம் இந்தியா முழுவதும் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகாலமாக வெளியில் சொல்லாமல் இருந்த பெண்கள், ‘மீ டு’ இயக்கம் மூலம் தைரியமாக தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 

#MeToo ஹேஸ்டாக் மூலம் நடிகை தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரணாவத், சின்மயி, லீனா மணிமேகலை, சுருதி ஹரிகரன் உள்பட பலர் பாலியல் புகார் எழுப்பிவருகிறார்கள். இதற்கு ஆதரவும் எதிர்ப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் நானே படேகர், அர்ஜுன், வைரமுத்து உள்பட பல பெரும் தலைகள் சிக்கியுள்ளனர்.

 
சிலர் ‘மீ டு’ இயக்கம் மூலம் ஆதாரம் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், தேமுதிக பொருளாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரேமலதா விஜயகாந்த், ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo எப்படி வரும்? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : ஸ்டாலின். 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார்.

 
இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகவே அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்து, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தபின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. தொடர்ந்து அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால், சிறிது நாட்கள் அவர் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார். ஆகவே கழக தொண்டர்கள் யாரும் அவரை சந்தித்து இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினியை கேலி செய்த அமைச்சர். 

சபரிமலை விவகாரத்தில் பட்டும் படாமல் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்து பேசியுள்ளார்.

 

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்படும் பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

 
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில் வேறு கருத்து இல்லை. ஆனால், காலம் காலமாக பின்பற்றப்படும் ஐதிகம் பாதுகாக்கப்பட வேண்டும். சடங்குகளில் நீதிமன்றம் தலையிடாமல் இருப்பது நல்லது என தெரிவித்தார்.

 
இந்நிலையில் ரஜினியின் கருத்திற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஒரு விஷயத்தில் தீர்க்கமான கருத்தை தெரிவிக்கக் கூட தைரியமில்லாத ரஜினிகாந்தை மக்கள் எப்படி ஒரு தலைவனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவரது கருத்து பல விஷயத்தில் கழுவுற மீனில் நழுவுற மீன் மாதிரி தான் இருக்கிறது என ஜெயக்குமார் கேலி பேசியுள்ளார்.

நிருபர்களை ஏமாற்றி, அமைச்சர் பணத்தை ஆட்டைய போடும் PRO. 

தற்போது அதிமுக ஆட்சியை , முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும், ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்.

இதற்கு அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, பல இடங்களில் புதியப்புதிய திட்டத்தை நிறைவேற்றியும், துவக்கியும் உள்ளனர். 

பல சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் சேவைகளை, மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய முக்கிய பொறுப்பை ஊடகங்கள் செய்துவருகின்றன.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஆன்லைனில் உடனடியாக வரும் செய்திகளை பார்த்து பல துரித நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதன் காரணமாக ஆன்லைன் ஊடகங்களுக்கு, மத்தியில் உள்ளது போல பல சலுகைகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் போனது. பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் மற்றும் ஆன்லைன் ஊடகத்தை சேர்ந்தவர்களுக்கும் பெரும் இழப்பு.

செய்திகளை சேகரிக்கும் நிருபர்களை அதிமுக தலைவர்கள், அன்போடும், கேட்கும் கேள்விகளுக்கு முறையாகவும் பதில் அளித்து வருகிறார்கள்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தலைவர்கள், நிருபர்களை உபசரிப்பது வழக்கம்.

இப்படி, உபசரிக்கும் பெரும் பொறுப்பை தனது PRO க்களிடம் வழங்கியுள்ளார்கள் தலைவர்கள்.

ஆனால், PRO க்கள் நிருபர்களை சரியாக நடத்துகிறார்களா? என்றால் இல்லை.
இந்த PRO க்கள் தொலைக்காட்சிகளில், மாத சம்பளம் வாங்கும் நிருபர்களை உபசரித்தும், ஆன்லைன் மீடியா நிருபர்களை கேவலமாகவும் நடத்துகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

இதுபோன்று வேறுபிரித்து, நிருபர்களை நடத்த வேண்டும் என்று, தலைவர்கள் சொல்வதில்லை.

ஆனால் சில மட்டமான PRO க்கள், நிருபர்களை உபசரிப்பதற்காக தலைவர்கள் வழங்கிய பணத்தில், பல லட்சங்களை ஆட்டைய போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது, தலைவர்களுக்கு தெரியாத அதிர்ச்சி அளிக்கும் உண்மை.

இப்படி சில PRO க்களின் முகத்திரையை கிழிக்கத்தான் இந்த பதிவு.

இதை முழு வீடியோவை ஆதாரமாகவே வைத்துள்ளது, அரசுமலர் செய்தி குழு. 

இதில் முக்கியமானவர், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் PRO திவாகர் தான்.

சென்னை காந்தி மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் பல மணி நேரம் காத்திருந்து, செய்தி சேகரித்த ஆன்லைன் நிருபர்களை PRO திவாகர், மிகவும் மோசமாக நடத்தியது, மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் நிருபர்களை அன்புடன் அழைத்து உபசரிப்பவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அவரின் நல்ல செயல்களை, விரிவான செய்திகளாகவும், வீடியோ பதிவுகளை YOUTUBE மூலமாகவும் ஆன்லைன் மீடியா வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவார்.

ஆனால் அமைச்சர் பெயருக்கு, நிருபர்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும், இது போன்ற PRO க்களால் பல முக்கிய செய்திகள் முடங்கிப்போய் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை.

இது போன்ற PRO க்கள் மீது, அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட நிருபர்களின் கோரிக்கை.

முக்கிய குறிப்பு : 

PRO நிருபர்களை உபசரித்த விதம்.

மாத சம்பளம் வாங்கும் நிருபர்களுக்கு – ரூபாய் 500

அரசு அட்டை உள்ளவர்களுக்கு – ரூபாய் 200

ஆக, பணம் பெற்றவர்கள் 33 பேர் மட்டுமே. இதில் சில போலி நிருபர்களும் அடங்குவர்… 

தினகரனுக்கு சவால் விடும் விஜயபாஸ்கர்.. 

கடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்களுக்கும், அம்முக துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் இடையே காரசாரமான சொற்போர் நடந்து வருகிறது. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இரு கட்சிகளுக்கும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தினகரனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட, டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல, அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி.

10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி – டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள்.

டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு.. 

குற்றப் பின்னணி உள்ளவர்களே தேர்தல்களில் அதிகமாக போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக குற்றவாளிகளையே தேர்ந்தெடுக்க நேர்கிறது. அதை தடுப்பதற்காக குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடை செய்யும் விதமாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் ’அரசியலில் ஊழல் அதிகரித்து வருவது வருத்தமாக உள்ளது. குற்றப்பத்த்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்தாமல் அடிப்படை நாகரிகத்தை அரசியல் கட்சிகள் கடைப் பிடிக்க வேண்டும். அதற்கு தடை விதிக்கும் இடத்தில் நீதிமன்றம் இல்லை. நாடாளுமன்றம்,சட்டமன்றம் போன்றவற்றின் மூலமே சட்டதிருத்தம் செய்து இதற்கான தடையைக் கொண்டுவரலாம்’ என்று கூறியுள்ளனர்.