மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் –

நாடாளுமன்றம், இடைத்தேர்தல்

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் –

கமல்ஹாசன் போட்டியிடவில்லை

கோவை -டாக்டர் மகேந்திரன், பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்னம்

கோவை, மார்ச் 25,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை.

கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அந்த கட்சியின் சார்பில் 19 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் (தனி)- ஆனந்தமலை எம்.தங்கராஜ் (இந்திய குடியரசு கட்சி), திருவண்ணாமலை- அருள், ஆரணி- ஷாஜி, கள்ளக்குறிச்சி- கணேஷ், நாமக்கல்- தங்கவேல், ஈரோடு- சரவணகுமார், ராமநாதபுரம்- விஜயபாஸ்கர், கரூர்-டாக்டர் ஹரிஹரன், பெரம்பலூர்-அருள்பிரகாசம், தஞ்சாவூர்-சம்பத்ராமதாஸ், சிவகங்கை- கவிஞர் சினேகன், மதுரை- அழகர், தென்சென்னை- ரங்கராஜன் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி), கடலூர்-அண்ணாமலை, விருதுநகர்- முனியசாமி, தென்காசி (தனி)- முனீஸ்வரன், திருப்பூர்- சந்திரகுமார், பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்னம், கோவை -டாக்டர் மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம் சார்பில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். இதில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை. இதனால் மூலம் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் எனது முகமாக கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும், 60 லட்சம் குடும்பங்களின் வறுமையை அகற்றுவோம்,குடிசைகள் இல்லா தமிழகம் ஆக்குவோம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வசதி 5ஆண்டுகளில் வழங்கப்படும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும், சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழி ஆக்கப்படும், ஐகோர்ட்டின் கிளைகள் இந்தியாவில் 6 மண்டலங்களில் நிறுவப்படும், கல்வி உள்பட பொதுப்பட்டியலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு 5 துறைகள் மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும், ரேஷன் பொருட்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வழங்கப்படும், ஆசிரியர் பணி மாற்றம் ஊழல் அற்ற முறையில் நடைபெறும் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை இட ஒதுக்கீடு பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படும், வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் பெண்கள் பெயரில் தான் பதிவு செய்யப்படும் அதை ஆண்கள் பெயரில் மாற்றும் பட்சத்தில் அதற்கு உண்டான இழப்பீடு வழங்கப்படும், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 100 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.
பின்னர் வேட்பாளர் கள் பட்டியலை வெளியிட்டார்.
இது போல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:- 1. பூந்தமல்லி-பூவை ஜெகதீஷ் 2.பெரம்பூர்-பிரியதர்ஷினி 3.திருப்போரூர்-கருணாகரன் (இந்திய குடியரசு கட்சி) 4.சோளிங்கர்-கே.எஸ்.மலைராஜன் (இந்திய குடியரசு கட்சி) 5.குடியாத்தம்-பி.வெங்கடேசன் (இந்திய குடியரசு கட்சி) 6.ஆம்பூர்-நந்தகோபால் 7.ஒசூர்-பி.ஜெயபால் 8.பாப்பிரட்டிப்பட்டி-நல்லதம்பி 9.அரூர்-குப்புசாமி 10.நிலக்கோட்டை- டாக்டர் சின்னதுரை 11. திருவாரூர்- அருண்சிதம்பரம். 12.தஞ்சாவூர்- துரைஅரசன் (வளரும் தமிழகம் கட்சி). 13.மானாமதுரை- ராமகிருஷ்ணன். 14. ஆண்டிபட்டி-தங்கவேல் (வளரும் தமிழகம் கட்சி). 15 பெரியகுளம் -பிரபு 16. சாத்தூர்-சுந்தர்ராஜ். 17. பரமக்குடி-உக்கிரபாண்டியன். 18. விளாத்திகுளம்-நடராஜ் (தமிழ்விவசாயிகள் சங்கம்). இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், விவேக் நாடகத்துறையில் அனுபவமிக்கவராக

விவேக் இளங்கோவன்: இயக்குனர்
உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், விவேக் நாடகத்துறையில் அனுபவமிக்கவராக, ஒரு இயக்குனராக, ஒரு எழுத்தாளராக தன்னை பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவர். இண்டஸ் குழுமத்தின் பல்வேறு நாடக மற்றும் திரைப்பட தயாரிப்புகளில் இயக்குனர் குழுவில் பங்குபெற்றிருக்கிறார். அவரது குறும்படங்களான ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ சர்வதேவ அளவில் பல விருதுகளை வென்றிருப்பது அவரது ஆளுமைக்கு சான்றாக அமைகிறது.

ஜெரால்ட் பீட்டர்: ஒளிப்பதிவாளர்

உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக / வணிக ஆய்வாளராக பணிபுரிந்தாலும், ஜெரால்ட் நாடகம் மற்றும் நாட்டியத்தில் அனுபவமும், ஈடுபாடுமிக்கவராக, ஒரு ஒளிப்பதிவாளராக, தன்னை அடையாளப்படுத்தி கொள்வதில் பேரார்வம் கொண்டவர். ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ உள்ளிட்ட குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு குழுவை தலைமையேற்று நடத்தி, அவற்றை பல்வேறு சர்வதேச விருதுகளுக்கு தகுதி பெறச் செய்ததில் இவரது பங்கு அளப்பரியது.
இராம்கோபால் கிருஷ்ணராஜூ: இசை அமைப்பாளர்
மென் பொருள் பொறியாளராக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற்ற ஓர் இசையமைப்பாளர். தமிழக அரசால் ‘கலை இளமணி’ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். பல்வேறு இண்டஸ் குழும நாடகங்களுக்கும், குறும்படங்களுக்கும் இசை அமைத்திருக்கும் இவர், ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படங்களுக்கும் இவருடைய இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது எனலாம்.
திகா சேகரன்: தயாரிப்பாளர்
ஒரு அனுபவமிக்க தொழிட்நுட்ப நிர்வாகியும் மற்றும் முன்னாள் மைக்ரோசாப்ட் / ஸ்கைப் இயக்குனர். இண்டஸ் குழுமத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இக்குழுமத்தின் பல்வேறு படைப்புகளுக்கு இவரது பங்கு அளப்பரியது. கலை, படைப்புத்திறன், மற்றும் ஒத்த கருத்துடைய மாந்தர்களோடு சேர்ந்து பணியாற்றுவது இவரது பேரார்வம்.
வருண் குமார்: தயாரிப்பாளர்
மென்பொருள் பொறியாளரான வருண் டென்ட் கோட்டாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். திரைப்படத்தின் மீதான இவரது பேரார்வம் முறையாக, சட்டரீதியாக நல்ல உயர் தரமான திரைப்படங்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதே. அமெரிக்காவில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் விநியோக உரிமை பெற்றவராகவும் இருக்கிறார்.
அஜய் சம்பத்: தயாரிப்பாளர்
அஜய் உத்யோகரீதியாக ஒரு தரவு விஞ்ஞானியாக இருந்த போதும், இண்டஸ் தயாரிப்பு குழுமத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படத்தின் பிரதான தயாரிப்பாளரும் இவரே. படைப்பாற்றலை நிஜமாக, நிதர்சனமாக மடைமாற்றுவது இவரது விசித்திரமான திறமைகளுள் ஒன்று.
விவேக்: நடிகர்
இந்திய திரைப்பட நடிகரான பத்மஸ்ரீ விவேக் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட. சத்யபாமா பல்கலைகழகம் திரைத்துறையின் மூலம் சமுதாய பங்களிப்பிற்காக இவருக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
சார்லி: நடிகர்
சார்லி, ஏறத்தாழ 670க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கும் ஒரு இந்திய நடிகர். நடிப்பு திறனுக்காகவும், பிறர் பாணியில் பிரதிபலிப்பு திறமைகளுக்காகவும் போற்றபடுகிறார்.
பூஜா தேவரியா: நடிகை
இயக்குனர் செல்வராகவனின் ‘மயக்கமென்ன’ திரைப்பட நாயகி. ‘ஸ்ட்ரே பாக்டரி’ நிறுவனத்துடன் இணைந்து விரிவாக பணியாற்றியிருக்கிறார். ‘இறைவி’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
தேவ்: நடிகர்
‘வாயை மூடி பேசவும்’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படங்களில் இவரது நடிப்பு விமர்சனரீதியாக வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. இவர் ‘மேட் பாய்ஸ் கிரியேடிவ்ஸ்’ என்ற விளம்பர, குறும்பட, மற்றும் பெரு நிறுவன காணொளி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாண்மை பங்குதாரராகவும் இருக்கிறார்.
பெய்ஜ் ஹெண்டர்சன்: நடிகை
நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட ஹாலிவுட் நடிகையான இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தனது இருப்பிடமாக கொண்டிருக்கிறார். ‘ஸ்வெல்ட் டாக் ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையாக கொண்டு இயங்கும் நாடக நிறுவனமான ‘லிமினல் ஸ்பேஸ் பிளேயர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.
பிரவீன் KLகே எல்: படத்தொகுப்பாளர்
‘ஆரண்ய காண்டம்’ என்ற தமிழ் திரைப்படத்திற்காக இந்திய அரசின் தேசிய விருதை பெற்றவர். நான்கு மொழிகளில் ஏறத்தாழ 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் ‘சரோஜா’ திரைப்படத்திற்காக, கடந்த 2008 ஆண்டு தமிழக அரசின் ‘சிறந்த படத்தொகுப்பாளர்’ விருதையும் வென்றிருக்கிறார்.
குனால் ராஜன்: ஒலி பொறியாளர்
இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் சிறந்த ஒலி பொறியாளர்களில் ஒருவர். விஸ்வரூபம், தூங்காவனம், பேட்ட, உத்தமவில்லன், மெர்க்குரி உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களில் பணியாற்றியவர். மேலும், ‘ரேஸ் டு விட்ச் மவுண்டைன்’ மற்றும் ‘பேன்டாஸ்டிக் 4’ உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
பாலாஜி கோபால்: கலரிஸ்ட்
பாலாஜி, விருதுகள் பல வென்ற ஒரு சிறந்த இந்திய கலரிஸ்ட் மற்றும் டிஜிட்டல் திரைப்பட வடிவமைப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர். லிங்கா, மெட்ராஸ், வேலைக்காரன், லென்ஸ், ஆண்டவன் கட்டளை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் இவரது பணி சிறப்பித்து போற்றப்படுகிறது.
மதன் கார்க்கி: பாடலாசிரியர்
மதன் கார்க்கி வைரமுத்து ஒரு இந்திய பாடலாசிரியர், திரை எழுத்தாளர், ஆராய்ச்சி இணைப்பாளர், மென்பொருள் பொறியாளர், மற்றும் தொழிலதிபர். மாபெரும் வெற்றி படங்களான எந்திரன்,2.0, பாகுபலி தொடர், துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே’

நடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல்!

பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே ‘ நூல் வெளியீட்டு நிகழ்வு!

தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் தொகுத்துள்ள ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடிகர் சிவகுமார் அவர்களின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது .

நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , திரைப் பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் தமக்கும் உள்ள நட்புறவு பற்றியும் நூலைப் பற்றியும் கலந்துரையாடினார்கள்.


ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ்
வழங்கும்
குடிமகன்

குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறதுஎன்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம்குடிமகன்”.

விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர்.

அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக ந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களைந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.

அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்த்தீஷ்வரன்.

இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாகஈரநிலம்ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன்மது ஒழிப்பு போராளிமாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில்நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி யக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.

நடிகர் நடிகையர்:

ஜெய்குமார், ஜெனிபர், மாஸ்டர் ஆகாஷ், பாலாசிங் கிருஷ்ணமூர்த்தி வீரசமர், கிரண், , பாவா லெட்சுமணன்

தொழில் நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு : C.T.அருள் செல்வன்

இசை : S M பிரசாந்த்

படத்தொகுப்பு : K.R.செல்வராஜ்,

பாடல்கள் : சினேகன், தை.து.இரவி அரசன்

கலை : D.R.K.கிரண்

இணை தயாரிப்பு : செங்கை ஆனந்தன், .தனவனன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு:

சத்தீஷ்வரன்

சைரன் பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியீடு

‘சைரன்’ பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியீடு

‘சைரன்’ first single இன்று வெளியீடு
குணா பாலசுப்ரமணியன் இசையில், Muttamiz மற்றும் மோகன் ராஜா வரிகளில் “நீ மட்டும் போதும்” first சிங்கள் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது..
Vinz Production சார்பில் ராஜா ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சைரன்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மிலன் மேத்யூ இயக்கியுள்ளார். ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, அய்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிளாக் பாண்டி, மாரிமுத்து, வழக்கு எண் முத்துராமன், ஜி.எம்.சுந்தர், முருகானந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்களுக்கு குணா பாலசுப்ரமணியன் இசையமைத்துள்ளார்.. ஒளிப்பதிவை ரவீந்திரன் மேற்கொள்ள : படத்தொகுப்பை பவன் ஸ்ரீகுமார் கவனிக்கிறார். பின்னணி இசை : அஸ்வமித்ரா, ஸ்டண்ட் : ஓம் பிரகாஷ், கலை: டீ ஜே. வசனம் : சோமசுந்தரம்..
சமீபத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் lyrical வீடியோ இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது.

ஆதி ஹன்சிகா இணையும் பார்ட்னர்

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும்.

RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பார்ட்னர்” என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் ‘மகா’ நடிகையாகஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜாபடத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தின் பெரும் பில்லர்களாக பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், vtv கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, ‘டைகர்’தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர்.

டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது,

இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாக இருக்கும். மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்” என்றார்.
இன்று பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
மேலும் படத்தில் பணிபுரியும் டெக்னிஷியன்ஸ் விபரம்.
ஒளிப்பதி: சபீர் அஹமது
மியூசிக்: சந்தோஷ் தயாநிதி
எடிட்டர்: கோபி
கலை: சசி
மக்கள் தொடர்பு: யுவராஜ்

சே.கு. தமிழரசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை சந்தித்துப் பேசினார்.

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் திரு சே.கு. தமிழரசன் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை சந்தித்துப் பேசினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவருமான திரு சே.கு. தமிழரசன் அவர்கள், அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு மு தங்கராஜ் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயளாளர் திரு N சம்பத் அவர்களோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை இன்று (18.03.2019) சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் R மகேந்திரன் அவர்களும் உடனிருந்தார்.

Sindhubaadh Movie

After the back to back success of two flicks and Director S. U. Arun Kumar is coming out with yet another mega budget movie starring Vijay Sethupathi titled as “Sindhubaadh”.

Director S U Arun Kumar has a knack of approaching every project with a different plot, every time. As we know Pannaiyaarum Padminiyum and Sethupathi genres are completely different from each other, Sindhubaadh also has a different storyline and treatment. It comes out as an action thriller.

Two distinguished talents, K Productions S.N. Rajarajan who has released Baahubali-2 and produced Pyar Prema Kaadhal in association with Vansan Movies Shan Sutharsan who has produced Sethupathi have co-produced this mega budget action thriller.

Anjali plays the female lead in this movie. After a long time, she has found a very powerful role and her performance is expected to be the talk of the town. The romantic scenes involving Vijay Sethupathi and Anjali were interestingly captured to the delight of the fans.

Surya Vijay Sethupathi, son of Vijay Sethupathi plays a very important role right throughout the movie. Vijay Sethupathi and Surya have played the role of petty thieves in Tenkasi in this movie.

Linga, who has played SI in the movie Sethupathi, now plays the role of a Thailand villain in this movie. He has put on 18 kg weight and have transformed himself into a rough and rugged outlook for this movie. It requires special mention here that he has also taken enough pains to learn the language, habits, lifestyle of the people of Thailand to best play his role in this movie. Vivek Prasanna also plays a very important role in this movie.

Director S U Arun Kumar has special bent mind towards music. Yuvan Shankar Raja has scored the music and this combo has created a flutter among the music lovers. All five songs in this movie are of completely different in nature. This music album is also expected to be a big hit. International Orchestra is trusted with the re-recording and background music, which is currently in progress in Dubai.

The movie has been shot in many never seen locations including Tenkasi, Malaysia and Thailand. Hollywood fame Nung aka Pradit Seeluem has directed the action scenes in Thailand. The stunts were captured in such a balance that its awe-inspiring and realistic as well.

With 80% of the post production work completed, to get that realistic touch, Director is travelling to Malaysia and Thailand to record the dubbing voices for the scenes captured in those two countries.

George plays as the comedian in this movie. After the release, Vijay Sethupathi – George team’s comedy scenes will prove to be a talk of the town. Malaysian artistes Ganesan and Subathra have played pivotal roles in the movie.

Editor Ruben’s work has received much acclaim with a teaser hitting viral proportions. His innovative approach is believed to be the reason for this humongous success.

Vijay Karthik Kannan who’s the celebrated Cinematographer for AR Rahman’s music albums is taking care of the lens, after the movie Iravaakkaalam. He has taken utmost care in capturing the emotions, the environment and the people as this movie is shot in diverse locations encompassing diverse cultural backgrounds like Tenkasi, Malaysia and Thailand.

This sets a different tone with capturing the lives of the people of Malaysia & Thailand, in contrast to just showcasing the exotic locations of the foreign countries, which has been the norm.

How this society stands as a hindrance to a simple man who wants to lead a simple life and the acceptable solution that it provides forms the core theme of this movie. The movie is expected to hit screens this summer.

Tamil, Telugu, Kannada & Malayalam

Tamil, Telugu, Kannada & Malayalam

The award winning Director and the Suspense-Action-Thriller Specialist Sunil Kumar Desai, comes out with a multilingual mystery flick, this time in four regional languages namely, Tamil, Telugu, Kannada and Malayalam.

The movie named “Uchakattam” in Tamil, and “Udgarsha” in Kannada, Telugu and Malayalam is slated for release on 22 March 2019.

R Devaraj on the behalf of D’creations, has produced this movie and is to be released worldwide in Tamil by AGS Cinemas.

Sunil Kumar Desai, known for his impeccable skills to weave mystery stories, this time has a great entertainer to offer, sprinkled with the suspense, twists and turns, and remarkable action sequences in this soon to be released movie. The humongous response of the trailer has set the right tone for the movie release.

This movie has been spun around the scheme of events that happen in the 48 hours that constitute a New Year’s Eve. The murder which takes place in the resort creates a chaotic situation and makes it an impossible task for the lead characters to achieve their goal. This character driven mystery flick, based on the mysterious incidents that occur in a resort, under different themes from murder to betrayal, love to lust, conscientiously coated with the requisite mystery and violence sends chill down the spine. The dramatic change of events, the crazy characters, and the real hidden agenda behind the murder forms the plot of this movie and the effective screenplay keeps the thrill till the last frame.

Thakur Anoop Singh who played villain in Singam 3, plays the male lead in this movie. Thakur is a fitness freak, a body builder, a health conscious person to the core, who has several international fitness awards to his name, has carved out a niche for him, and is already blossoming into a versatile actor in the reckoning. Thakur Anoop Singh has Sai Dhanshika and ‘Tadam’ Tanya Hope playing female leads against him.

‘Vedalam’ fame Kabir Duhan Singh plays the antagonist. Adukalam kishore, Bahubali Prabhakar, Shravan Raghavendra, Vamshi Krishna, Shraddha Dass have played their roles to perfection.

About the Director:

Sunil Kumar Desai is a four time Kannada State award winner for his impeccable contributions to the Kannada Film Industry. It was his much acclaimed first movie ‘Tarka’ (1989) that earned him two state awards for the best screen play and the best director. Puriyaadha Puthir (Mystifying Puzzle) is a 1990 Indian thriller film directed by K. S. Ravikumar in his directorial debut. It is a remake of the 1989 Kannada film Tarka. Sunil is known for his skills in bringing entirely contrasting subjects as movies, cutting across the patterns, and refusing to be set in a mold. His impressive list of movies includes Tarka, Utkarsha, Sangharsha, Nishkarsha, Beladingala Baale, Nammoora Mandara Hoove and many more.

Cast & Crew:

Lead Cast (including character name):

THAKUR ANOOP SINGH as Aditya

SAI DHANSIKA as Rashmi

TANYA HOPE as Karishma

KABIR DUHAN SINGH as Dharmendra

KISHORE as Vijay Menon

Other Cast (including character name):

SHRADDHA DAS as Kruthika

PRABHAKAR as Samrat

VAMSHI KRISHNA as Rakesh

SHRAVAN RAGHAVENDRA as Teja

MANJUNATH. D as DCP Shankar

Crew members with Designations:

SUNIL KUMAR DESAI (DIRECTOR, WRITER)

DEVARAJ.R (PRODUCER)

SANJOY CHOWDHURY (BACKGROUND SCORE)

P. RAJAN (DOP)

VISHNUVARDHAN (DOP)

B.S.KEMPARAJU (EDITOR)

NIKIL MURUKAN (PRO)