நீச்சல் உடை புகைப்படம் வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

நீச்சல் உடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தள்ளனர். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்…

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது .

இந்த நிலையில் சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை, உள்ளாடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிறிய விடுமுறை கொண்டாட்டம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தனது ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இதை பார்த்த பல ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

‘உங்கள் ரசிகனாக இருப்பது எனக்கு அசிங்கமாக இருக்கிறது’ என்று ஒருவர் கூறி இருக்கிறார். நல்ல குடும்ப வாழ்க்கை வாய்த்திருக்கிறது. இதை கெடுக்க வேண்டாம். புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் என்று மற்றொரு ரசிகர் அறிவுரை வழங்கி உள்ளார். இன்னொரு ரசிகர், ‘இன்றைய கால கட்டத்தில் சிலர் மாடலிங், டிரண்டிங், பே‌ஷன் என்ற பெயரில் தங்களுடைய அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வதன்மூலம் தவறான எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதற்கு ‘லைக்’, ‘கமெண்ட்’, ‘ஷேர்’ எதிர்பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த நாடு கெட்டுப்போவதற்கு இதுவும் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மனிதன் நல்லதை ஏற்க தாமதம் ஆகும். ஆனால் இதுபோன்ற ஆபாசங்கள் வேகமாக பகிரப்படும். எனவே, இதுபோன்ற சர்ச்சைக்கு உள்ளாக வேண்டாம்.

பெண்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அவை பிறரின் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதாக இருக்க கூடாது’ என்று விதம்விதமாக ரசிகர்கள் சமந்தாவை விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

பிரபாசும் நானும் நண்பர்கள்: அனுஷ்கா

‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாகி இருக்கிறார். இதுகுறித்து அனுஷ்கா கூறியிருப்பதாவது…
பாகுபலி’ படத்தில் நடிக்கும் போது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை 2 பேரும் உடனடியாக மறுக்கவில்லை.

இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பிவிட்டதற்காக அனுஷ்கா அவரது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டது. இப்போது, அனுஷ்காவுக்கு நெருக்கமானவர்களே பிரபாசை அவர் காதலிக்கிறார் என்று கிளப்பி விடுவதாகவும் இதனால் அனுஷ்கா கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாகி இருக்கிறார். இதற்கு இயக்குனரிடம் சிபாரிசு செய்ததே பிரபாஸ் தான் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால் பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகிவிட்டது என்று மீண்டும் பேச்சு எழுந்து இருக்கிறது. இதற்கு பதில் அளித்துள்ள அனுஷ்கா…

“நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளார். நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் கணவருடன் நடிகை தேவயானி சாமி தரிசனம்

டைரக்டர் ராஜகுமாரன் நடிகை தேவயானியுடன் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
‘காதல்கோட்டை’ உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் ராஜகுமாரன். காதல் கோட்டை படத்தில் நாயகியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டைரக்டர் ராஜகுமாரனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆகும்.

சென்னையில் வசித்து வந்தாலும் அவ்வப்போது மனைவி தேவயானி மற்றும் குழந்தைகளுடன் டைரக்டர் ராஜகுமாரன் அந்தியூர் வந்து செல்வார்.

அதேபோல் நேற்றும் டைரக்டர் ராஜகுமாரன் நடிகை தேவயானியுடன் அந்தியூர் ஆலம் பாளையத்தில் உள்ள தனது பண்ணைவீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று மாலை 6.30மணி யளவில் ராஜகுமாரனும் தேவயானியும் தம்பதி சகிதமாக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிறகு சாமி தரிசனம் செய்த அவர்கள் கோவிலை வலம் வந்தும் வழிபட்டனர்.

கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள் நடிகை தேவயானியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரிடம் சென்று பேசினர். அப்போது பெண்களிடம் நடிகை தேவயானி, “அக்கா நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லோரும் சுகமா?” என்று விசாரித்தார்.

அப்துல் ரகுமான் மறைவுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்

உடல்நலக்குறைவால் நேற்று காலமான கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் நேற்று காலமான கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு ரஜினிகாந்த், கமல் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“மதிப்பிற்குரிய கவிக்கோ அப்துல் ரகுமான், ஒரு சிறந்த எழுந்தாளர், அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்”. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் “அப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார் உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார். என் மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தே தீருவர்”

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம்

சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேறவேண்டியதுதான் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

28 சதவீதமாக அறிவிக்கப் பட்டுள்ள சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை 12 முதல் 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எல்.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசன் பேசியதாவது:

ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக இந்திய சினிமாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்திருப்பது சரியானதல்ல. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு பிராந்திய மொழியின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்.

ஆனால், உலகளாவிய ரசிகர் களை கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் இந்திய அளவில் ரசிக்கப்படும் இந்தி படங்களுக்கும் ஒரே அளவில் வரி என்பது சரி யல்ல. பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு எந்த பகுதி யில் வசித்தாலும், அவர்களது எண் ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டு களுக்கான விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது. ஆனால் உலக அளவில் விருதுகளைப் பெற்று பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள்தான். இவ்வாறான சிரமங்களை சிறிய படங்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சினிமாவை சூதாட்டமாக யாரும் கருத வேண்டாம். அதை கலையாகப் பார்க்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுடன் உரையாடல் நடைபெற்று வருகிறது. யாரால் எது சாத்தியம் என்பதை அரசு தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். சினிமாவை தனியாகப் பிரித்து பார்க்க வேண்டாம். இந்த வரி அதிகரிப்பால் முறையான கணக்கை சமர்ப்பிக்கவும் வழியில்லாத நிலை உருவாகும். என் மழலை மொழி மாறியதே இந்த சினிமாவில்தான். இதுதான் என் வாழ்க்கை. நாம் தொழில் பண்ண வேண்டும். சினிமா துறை மீதான இந்த ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேற வேண்டியதுதான். ஆகவே, அரசு இதை புரிந்துகொண்டு எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இந்தி சினிமாவுக்கு இணையாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது: கமல்ஹாசன்

 

இந்தி மொழி படங்களுக்கு இணையாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திரைத்துறைக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசிய கமல்ஹாசன் “ சினிமா என்பது கலை அது சூதாட்டம் அல்ல, புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்று.

இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28 % வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது. மேலும் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு ஒற்றை கலாச்சாரம் பழக்க வழக்கம் ஆகியவற்றை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்.

இது போன்ற நடவடிக்கைகள் அங்கு தான் இட்டுச் செல்லும் பிராந்திய மொழி படங்களுக்கு இந்த அளவுக்கு வரி விதித்தால் அது மூழ்கும் நிலையே உருவாகும் “ என்றார் கமல்ஹாசன்

விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 61’ பர்ஸ்ட் லுக்

விஜய் பிறந்தநாளில் அவர் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
‘தெறி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தையும் அட்லியே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பா படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தின் தலைப்பு இன்னமும் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 100-வது படமாகும். இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவைப்போல் உடல் எடையை மாற்றும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்துக்காக அனுஷ்காவை போல் உடல் எடையை மாற்ற முயற்சி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகையர் திலகமான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. இப்படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், சமந்தா நடிகை ஜமுனா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் முறையில் சாவித்ரியின் உடம்பு அளவுக்கு குண்டாக்கவிருக்கிறார்களாம். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷை உடல் எடையை கூட்டும்படி இயக்குனர் நாக் அஸ்வின் கூறியிருந்தாராம்.

ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் சமயத்திலும் அவரது உடல் எடை கூடவே இல்லையாம். இனிமேல், வேறு நடிகையை தேடிச் செல்லமுடியாது என்று நினைத்த படக்குழு, வேறு வழியில்லை என்பதுபோல் கீர்த்தி சுரேஷை வைத்தே படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்களாம்.

தற்போது கீர்த்தி சுரேஷ் இரட்டை ஜடை போட்டு படப்பிடிப்பில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சாவித்ரி சாயல் இருந்தாலும் அவரைப்போல் குண்டாக இல்லை என்றொரு கருத்து சமூக வலைத்தளத்தில் பரவியது.

இதனால், ‘பாகுபலி-2’ படத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை கிராபிக்ஸ் முறையில் ஒல்லியாக மாற்றியதுபோல, இப்படத்தில் ஒல்லியாக இருக்கும் கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸை பயன்படுத்தி குண்டாக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி திருவிழாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்: கஸ்தூரி சாடல்

ஐஐடி மாணவர்கள் நடத்தி வரும் மாட்டுக்கறி திருவிழாவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் கஸ்தூரி

மாட்டிறைச்சி தடை குறித்து மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சையாகி உள்ளது.

மாட்டுக்கறி திருவிழா நடத்தி வரும் மாணவர்களை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் கஸ்தூரி. தனது ட்விட்டர் பதிவில், “”மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது தவறான சிந்தனை. ஒரு தரப்பை புண்படுத்தி எதிர்ப்புகளை எழுப்பவே நடத்தப்பட்டுள்ளது. இப்பொது அது கிடைத்துவிட்டது. நான் இந்த கால்நடை இறைச்சிக்கான தடையை எதிர்க்கிறேன்.

ஆனால் எனது உணவுப் பழக்கம் என்னை சுற்றியிருக்கும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் நாம் ஒன்றும் நாயகர்கள் அல்ல. முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி திருவிழாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? மலிவான செயல். கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம். ஐஐடியில் படித்தவர்களுக்கு வன்முறை கை கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி

SALIM MERCHANT DEBUTS AS AN RJ WITH 92.7 BIG FM'S NEW SHOW #SALIM

Mumbai, 17 th  May, 2017: 92.7 BIG FM, India’s No. 1 and largest radio network, has been constantly

creating shows that are successful in alluring its audience across regions. Adding to the repertoire of

diverse shows, the radio network introduced a new show named #Salim under its hat as its latest

offering. The musical show that marks the debut of legendary music composer Salim Merchant as an

RJ was launched amidst a high-octane event. The show takes its listeners on a refreshing musical

journey every Monday to Thursday between 6pm-8pm.

#Salim was launched in the presence of acclaimed singer and composer Salim Merchant who was

seen visibly ecstatic for donning the role of an RJ. The set up impeccably represented the look and

feel of a studio with a console and mike, providing the audience present at the event an insight into

the making of the show.

#Salim a distinctive show based on trendsetting music of Indian cinema, will take forward 92.7 BIG

FM's legacy of providing the most revolutionary approach of storytelling and distinctive shows to its

listeners. The bouquet of enthralling line-ups will add to the grandeur of the show and will lend an

enriching experience to its audience by inviting legendary artists from the music industry. Ace

maestros such as Bappi Lahiri, Usha Uthup, Jatin-Lalit, Shaan, Shankar Mahadevan, Anu Malik,

Kumar Sanu, Amit Trivedi, Udit Narayan, and Sonu Nigam among others, will mark their presence

on the show.

The show in the whimsical voice of Salim Merchant will acquaint listeners with his in-depth

knowledge about music. It will also share interesting anecdotes, trivia and behind the scene details

such as the kind of instruments used in the making of evergreen songs of Indian cinema among

other riveting information. This inimitable format perfectly emulates the essence of the show’s

tagline – ‘Bollywood Ke Trendsetters Salim Merchant Ke Saath’.

Commenting on the occasion, playback singer and composer, Salim Merchant said, “Radio is a

distinctive platform which has always attracted and amplified the urge in me to do something in that

field. I am glad to be associated with India’s number one radio network 92.7 BIG FM which gave me

an opportunity to connect with my listeners as a radio jockey. I love the concept of the show #Salim

which takes the listeners through an amazing storytelling approach of the iconic songs of our Hindi cinema.”