சர்வதேச உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு “ரீச் டூ பீச்” என்ற நிகழ்வினை

 

 

 

மாற்றுத்திறனாளிகளின் கனவினை நிறைவேற்றிய ரைன் டிராப்ஸ் அமைப்பினர்…

சர்வதேச உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு “ரீச் டூ பீச்” என்ற நிகழ்வினை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரைன் டிராப்ஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.நடிகர் சரத்குமார் விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோஷம் பின்னணி பாடகர் வேல்முருகன்.தமிழ்நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்கத்தலைவர் வரத குட்டி இந்தியா பிராஜக்ட்ஸ் பூபிஎஸ் நாகராஜன் ரைன் டிராப்ஸ் அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார்..இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டது மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும் சென்ற ஆண்டு தனது மனைவி நடிகை ராதிகா கலந்து கொண்டு இந்த நிகழ்வின் சிறப்பு குறித்து எனக்கு எடுத்துரைப்பது மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் ஆர்வத்தை தூண்டினார்..‌மாற்றுத் திறனாளிகளுக்கு நாமனைவரும் இயன்றவரை உதவி செய்வதை கடமையாக இருக்கிறது அடுத்த ஆண்டு இந்த கடற்கரை மணலில் அவர்கள் தானாகவே சென்று கடல் அலைகளை தொடும் வகையில் சிமெண்ட் தளம் அமைக்கப்படும் என தெரிவித்தார்..பின்னர் மாற்றுத்திறனாளிகளை தன் கரங்களால் தூக்கி சென்று கடல் அலைகளை தொட வைத்து கூடியிருந்த பொதுமக்களையும் ரசிகர்களையும் மாற்றுத்திறனாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கடற்கரைக்குச் செல்ல வேண்டும் ஈர மணலில் அமர்ந்து கடல் அலைகளை ரசித்தபடி அதில் கால் நனைக்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகளின் கனவினை ரைன் டிராப்ஸ் அமைப்பு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்கத்துடன் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.

சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பேரணி

 

 

 

ஆவடி ராஜன் செய்தியாளர்

ஆவடி அருகே தனியார் பள்ளியின் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பேரணி

ஆவடியை அடுத்த பட்டாபிராமில் சாலை விதிகளை பின்பற்றவும் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தியும் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டபிராம் பகுதியில் உள்ள இமானுவேல் பள்ளி மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.இதனை ஆவடி போக்குவரத்து உதவி ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கோஷங்களை மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் எழுப்பினர்.பள்ளி வளாகம் துவங்கிய பேரணி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.சாலைபாதுகாப்பு பேரணியில் 500கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இமானுவேல் பள்ளியின் தாளாளர் பீட்டர் லயன்ஸ் கிளப் கவர்னர் எஸ் வி மாணிக்கம் நந்தகோபால் மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

V. #BALAMURUGAN #9381811222

WORLD FOOD DAY

 

Music Director AR Raihanah, Lyricist Snehan flagged off the Raindropss Free Food Truck to serve the needy people on WORLD FOOD DAY

 

RAINDROPSS, a widely known youth based social organization in Chennai concentrates mainly on delivering social awareness messages to the public through entertainment and media. Music Composer and Producer A.R.Raihanah (Sister of Oscar winning music composer A.R.Rahman and mother of music composer turned actor G.V.Prakash Kumar) is the Goodwill Ambassador of Raindropss.

On the occasion of World Food Day, Raindropss in association with Biriyani Brothers organized “Free Food Truck” in Chennai as a part of their “Virunthali Feed the needy” project, a vision towards hunger free society, Raindropss Free Food Truck was flagged off by Music Director A.R.Raihanah, Lyricist Snehan and Saran, Managing Director of Birlyani, Brothers from Anna Nagar. There on the truck took its route to Thirumangalam, Koyembedu Market, Virugambakkam and Saligramam to serve thousands of needy and homeless people in the city.

Serving the needy on the roadsides is not something new to Raindropss, we already have a project Virunthali Feedy the needy, where we serve the needy people almost every week. We started Virunthali feed the needy project, with a vision of creating a hunger free society. We wanted to name the project as ‘Virunthali’, as we need to treat the needy people starving for food on the roadside as our guests, feed them with a meal and conquer their hunger with love. To do something special and big on World Food Day, we wanted to serve large number of people through our Raindropss Free Food Truck and create awareness on chronic hunger. We received wonderful response and support for this noble initiative through various social media’s. Volunteers of Raindropss, Biriyani Brothers and Students from schools and colleges joined to help in serving the food to needy, Said Aravind Jayabal, Founder & Creative Head of Raindropss.

V. #BALAMURUGAN #9381811222

Diwali and Wedding Collection at Neeru’s ANNA NAGAR STORE

This festive season indulge in a royal spread of gorgeous Diwali and Wedding Collection at Neeru’s ANNA NAGAR STORE

Neeru’s is all set to celebrate with out-of-the-world new Diwali & Wedding Collection. The collection is exclusively dedicated to weddings and upcoming festival.

We are about to add a little more sparkle to your Diwali festivities.
Diwali is here and what makes it complete? The right outfit.

This festive collection is all about royalty, sparkle, and vibrant tones, not only for you but for your whole family. If you are someone who loves ethnic clothes with a dash of modern trends in it then look no further as we have got just the collection for you.

The vibe of this collection is inspired by a rich heritage and old treasured handwork.

This Diwali pick the perfect blend of moderns and festive attires with Neeru’s.

Neeru’s has always known what a woman loves best and hence the products also reflect a certain standard of tradition and class. The grace and the sophistication it lends to the wearer is simply unmatched, no other piece of fabric or clothing item has the power to please a woman than a silk saree. Knowing this too well and always up to date with the customers pulse Neeru’s has stocked its shelves with some of the most intricately designed and embroidered silk sarees . Owing to the tremendous growth in the fashion industry silk is no longer relegated to traditional mulberry silk but now numerous varieties are available at Neeru’s such as the Kanjeevaram, Dharmavaram, Uppada, Pochampally, Gadwal and the Benrasi brocade silk.

Neeru’s is a treasure house of Fashion, for the latest and the best Indian Ethnic Wear collections. Reaching out to a wide age group of men and women, the brand showcases exquisite bridal finery, formals, office outfits, daily cottons and much more. With a bouquet of ensembles from Silk sarees, Designer embroidery Sarees nor just traditional but in different silhouette, half Sarees, Lahengas, Salwar suits ( Ready to wear & Unstitch) Tunics, Mix & Match from top designers labels from India and in-House labels and the USP of Neeru’s is to give the best in fashion at the reasonable price tag.

Neeru’s is a name that has carved its niche by crafting a perfect blend of beauty and perfection into its dynamic range. Neeru’s latest collection is organized keeping in mind an idea of wearable fashion for a woman of ethnicity and style. Unmatched creations with the fusion of traditional motifs and embroideries and modern about the contemporary flavour. The collection blends traditional techniques with innovative ideas to create a trousseau that is both beautiful and unique

The fashion lovers can browse through the most attractive options to adorn on this traditional festival. The entire range of outfits at Neeru’s is characterized by bright and vibrant colours and reflects elegant charm.

In Chennai Neeru’s has exclusive outlets at Anna Nagar 2 Avenue, Cathedral Road , Phoenix Mall and very soon opening at Express Avenue Mall.

கலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி

 

 

  • சென்னை #தியாகராய நகர் மலபார் கோல்டு
  • அண்ட் #டைமண்ட்ஸ் ஷோரூமில் #கலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம் . சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 % வரை தள்ளுபடி
    உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது , சென்னை மாநகரில் தியாகராய நகரில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நாகர்கோயில் ஷோரூமில் நடைபெற்றுவருகிறது . தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் , அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன .மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 250 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது . தமிழ்நாட்டில் சென்னை , கோவை , மதுரை , நாகர்கோயில் , திருநெல்வேலி , சேலம் , ஈரோடு , தஞ்சாவூர் , இராமநாதபுரம் , தர்மபுரி , வேலூர் ஆகிய நகரங்களில் 13 கிளைகளை கொண்டுள்ளது .

கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை, மார்ச்.23
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தி யது.
உலக புவி தினம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையம் ஜவகர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
தண்ணீரை சிக்கனமாக
பயன்படுத்துவது குறித்தும்
வன உயிரினங்கள் குறித்தும்,
மரம் மற்றும் செடிகள் குறித்து வனக் கல்லூரி மாணவ மாணவிகள்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதே அரங்கில்
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்
என்று வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்களும், மாணவ மாணவிகளும்
கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேட்டுப்பாளையம் கிளையின் சார்பாக
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வாங்க படம் பார்க்கலாம்

“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேசவைப்பது வீண்” – இயக்குனர் பரபரப்பு பேச்சு..!

“வாய்ப்பு இல்லாத காலங்களில் உதவியவர் இயக்குனர் நேசமானவன்” – முனீஸ்காந்த் நெகிழ்ச்சி..!

எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கோபால் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி உள்ளதுடன் இசையமைத்தும் உள்ளார் இயக்குனர் கே.எஸ்.நேசமானவன்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் விமரிசையாக நடைபெற்றது.

நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும்.. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப டைரக்டர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார்.. அந்த நன்றிக்காக தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்” என நெகிழ்ந்தார்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவிமான ஜிஜி பேசும்போது, “இந்த படம் என்னுடைய முதல் முயற்சி.. படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.. இந்த படத்தை கமர்சியலாக எடுக்காவிட்டாலும் கலகலப்பாக நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியுள்ளோம்.. விநியோகஸ்தர்கள் எங்களைப்போன்றவர்கள் எடுக்கும் சிறிய பட்ஜெட் படங்களை வெளிவர உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காமெடி நடிகர் முத்துக்காளை பேசும்போது, “படத்தில் நடிக்க அழைக்கும்போது அண்ணே உங்களுக்கு முக்கியமான வேடம் என்று தான் அழைக்கிறார்கள்.. அப்படி நடித்த எங்களது புகைப்படத்தை போஸ்டரில் இடம்

பெறச்செய்வதில் என்ன கஷ்டம்..? அதுதான் எங்களுக்கான அங்கீகாரமாக இருக்கும்.. இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் யூடியூப்(Youtube) சேனல்களில் நான் இறந்துபோய் இரண்டு வாரம் ஆகி விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்.. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன்.. படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

இயக்குனர் நேசமானவன் பேசும்போது, “பெருமைக்காக சொல்லவில்லை என்றாலும், என்னுடைய இயக்கத்தில் நடித்த முனீஸ்காந்த் இன்று உயர்ந்த இடத்தில் இருப்பதை கண்டு நான்

சந்தோசப்படுகிறேன்.. என்னுடைய படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மிக பெரிய இடத்திற்கு வந்து விட மாட்டாரா என்று ஆசைப்பட்டேன்.. அது நடந்து விட்டது.. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக நாங்கள் அழைக்கவில்லை. காரணம் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் பிரபலங்களை அழைத்து, அவர்களை பேசவைத்து அவர்களை கவனித்து அனுப்புவது மட்டுமே வேலையாக மாறிவிடும்.. எங்களுக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அடுத்ததாக எங்கள் படத்தை திரையில் கொண்டு வருவதற்கு தங்கள் உழைப்பை கொடுக்க தயாராக இருக்கும்

வினியோகஸ்தர்களையும் எங்களால் மேடையேற்றி கவுரவிக்க முடியாமல் போய்விடும். விழாவிற்கு வரும் பிரபலங்கள் பேசுவதால் படத்திற்கு ஒரு தியேட்டர் கிடைத்துவிடாது.. அங்கே வினியோகஸ்தர்களின் தயவுதான் நமக்கு தேவைப்படும்.. அதனாலேயே சிறப்பு விருந்தினர்கள் என யாரையும் அழைக்கவில்லை” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ்

பாடகர்கள் – வேல்முருகன், சின்னப்பொண்ணு, தினேஷ்.வி, கவிதா, அய்யாத்துரை, யுகேந்திரன், பிரஷாந்தினி

நடனம் – மதுராஜ், ரமேஷ் கமல், நிர்மல்

படத்தொகுப்பு – ராஜேந்திரன்

ஒளிப்பதிவு – வினோத்.ஜி

கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் – கே.எஸ்.நேசமானவன்

தயாரிப்பு – எஸ் கோபால்

பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா

கோவை பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா
கோவை.மார்ச்.18-
கொங்கு மண்டலத்தில் இறந்த பிறகும் மேலை சிதம்பரம் எனும் பெயர் பெற்ற பேரூர் கோவில் தேரோட்டம் பக்தர்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவானது பங்குனி உத்திரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவானது 12.3.2019 அன்று கொடியேற்றம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா யாகசாலை பூஜை மலர் பல்லாக்கு அதை முழுக்க முன் அரண்மனை திருவிளக்கு உடனும், 17 3 2019 ஞாயிற்றுக்கிழமை ஆறாம் நாள் திருவிழாவாக பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வெள்ளையானை சேவையாக கொண்டாடப்பட்டது.

18.3.2019 ஏழாம் நாள் திருவிழாவாக யாகசாலை பூஜை பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் பக்தர்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது.
திருத்தேரில் மாதம்பட்டி எமன் சிவகுமார் குடும்பத்தாரும் பேரூர் பேரூர் ஆதீனம் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி கைலை புனிதர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் சின்னவேடம்பட்டி கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் பொன்மாரி வாசக சுவாமிகள் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.