உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்

தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

திருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு அதிகாரி வர்கீஸ் அதிகாரிகளுடனும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த

சென்னை மாநகரில் 149 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 19 சுகாதார மையங்களும் 4935 காய்ச்சல் மையங்களும் உள்ளன இதன் மூலம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 836 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர் இதில் 15119 பேருக்கு வைரஸ் தொற்று சோதனை நடத்தப்பட்டு அதில் 3 ஆயிரத்து 189 பேருக்கு நோய் தொற்று அறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் முன்கூட்டியே அவர்களை கண்டறிந்ததால் நோயிலிருந்து அவர்களை நாம் காப்பாற்ற முடியும் இந்த நோய் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை தமிழக முதல்வர் உயிர் காக்கும் மருந்துகளை தற்போது தமிழகத்திற்கு வாங்கி உள்ளார் நாம் விலகி இருந்து எச்சரிக்கையோடு இருந்தால் இந்த நோய் தோற்று வராது அப்படியே நோய்த்தொற்று வந்தாலும் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் நாம் பூரணகுணம் பெறலாம் மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியமாக உள்ளது இறப்பு விகிதம் இந்த மண்டலத்தில் சற்று அதிகமாக உள்ளது எங்களுக்கு கவலையாக உள்ளது வேறு பல நோய்கள் இருப்பதால் இந்த இறப்பு விகிதம் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது தற்போது இருப்பு விகிதத்தை ஜீரோ பிரசன்ட் ஆக மாற்ற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் மருத்துவத் துறைக்கு சவாலான இந்த பணியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வருகிறார்கள் சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப காவல் நிலையத்திற்கு வட்டாட்சியர் நியமனம் பொருளாதார நடவடிக்கையும் ஆரோக்கியம் இரு தண்டவாளங்கள் போன்றது அதனால்தான் சிறிது தளர்வுவகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் அம்மா உணவகங்களில் உணவு இலவசம் குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பு செய்வார்பொதுமக்கள் இந்த நோயை பார்த்து பீதியடையாமல் முன்னெச்சரிக்கையாக இருந்தால் வெகுவிரைவில் நாம் இந்த நோயில் இருந்து மீண்டு வரலாம் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்ததால் பல்வேறு நாடுகளில் இந்த நோய் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்

4 மாதம்தான் இந்த நோய்க்கு வீரியம் இருப்பதாக ஆய்வுகள் சொல்வது நமக்கு ஒரு ஆறுதலான செய்தி இ.பாஸ் பெறுவதில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டினால் அதை சரி செய்து கொள்கிறோம் என கூறினார்

*பேட்டி*
1.ஆர். பி.உதயகுமார்(வருவாய்த்துறை அமைச்சர்)

கொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

 

 

தொற்றுக்கு யார் காரணம் என விவாதம் செய்யும் நேரம் இதுஇல்லை

கொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட வரதம்மாள் கார்டன் மற்றும் பராக்கா சாலையில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதகளில் களப்பணியாற்றும் தன்னார்வலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனைகளை கூறியபின் சித்தா மருத்துவ உபகரணங்களை வழங்கினார். மேலும் ஓட்டேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

உலக மக்களிடையே போராட்டத்தை ஏற்படுத்திய கொரோனா காட்டாற்று வெள்ளம் போல பரவி வருகிறது.

உலகளவில் 1 கோடி தாண்டி இருக்கும் நிலையிலும் முறையான மருந்து இல்லாததால் கொரோனா தடுப்பிற்காக சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 5 ஊரடங்கு மூலம் பூஜ்ய கொரோனா தொற்று பரவலாக இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவிக நகர் மண்டலத்தில் இதுவரை 4387 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 1496 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை கவனித்து கொள்ள தன்னார்வலர்கள் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

தன்னார்வலர்களின் உற்சாகத்திற்காகவும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

திருவிக நகர் மண்டலத்தில் 50 மருத்துவ முகாம்களில் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நோய்தொற்று என்பது மிகபெரிய சவால் என்பதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம், வெளியே வந்தால் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும், கைகளில் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவி முன்னெச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு அரசு கோரிக்கையாக வைக்கிறது.

தொற்று ஏற்பட்டதற்கு யார் காரணம் என விவாதம் செய்ய வேண்டிய நேரம் இது இல்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அரசு செயல்பட்டு வருகிறது.

பேரிடர் மேலாண்மை தடுப்பு துறை மூலம் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.

சித்த மருத்துவ முறைகளை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்து சென்றுள்ளோம். தேவைக்கேற்ற பகுதிகளில் சித்த மருத்துவ முறைகளை சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

உண்மையான சிகிச்சை மற்றும் கட்டாய தேவைகளுக்கு மட்டுமே ஊரங்கில் தளர்வு செய்து இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என தான் ஊரடங்கை பிறப்பித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, கொரோனா தடுப்பு அதிகாரி அருண் தம்புராஜ் ஐஏஎஸ், மாவட்ட வருவாய் துறை அதிகாரி அருணா, ஜெயலட்சுமி ஐபிஎஸ், மண்டல அதிகாரி நாராணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்

 

 

முதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ளது வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் பகுதியில் கொரானா தடுப்பு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்க்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4000 க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர் மேலும்
தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஒரு நாளைக்கு 800 க்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்றார். மேலும்
தண்டையார்பேட்டை மண்டலம் கொரானா பாதிப்பில் தற்போது முதல் இடத்தில் இருந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 20 நாட்களுக்கு முன்பு 1908 இருந்தது தற்போது 1990 பேர் மட்டுமே கொரானா சிகிச்சை மேற்க்கொண்டு வருகின்றனர் என்றார் மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மொத்த பாதிப்பை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுகிறார் குணமடைந்தரவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறார் என்றும்
எதிர்க்கட்சி தலைவர் கணிணி முன்னால் இருந்து கொண்டு அறிக்கை அரசியல் செய்கிறார் ஆனால் முதல்வரும் அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணி செய்து கொண்டிருக்கிறோம் என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ஊரடங்கு நமக்கு வெற்றிதான் முதல்வரின் வியூகம் வெற்றி அடைந்துள்ளது என்றும் முதல்வர் மக்களின் நலன் கருதி விலை உயர்வான மருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளார் இதன் மூலம் இறப்பு விகிதம் இன்னும் குறையும். மேலும் தற்போது தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திமுகவுடன் இணைந்து கொரானா தடுப்பு களப் பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை திமுகவினர் இணைந்து பணியாற்ற மறுக்கின்றனர் என்றார்.

மக்களுக்கு நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை

 

 

நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை

சென்னை, ஜூன்,26

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் உள்ள கொரோனா தடுப்பு மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 18 வது நாளாக கொரோனா எதிர்ப்பு பணிகள். நடைபெற்று வருகிறது. இதுவரை 3 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் 757 பேரும், நேற்று 89 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1986 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தொற்று பரவும் விகதம் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 0.98 சதவிகிதமாக உள்ளது. சென்னையில் மேலும் 3 மண்டலங்களிலும் கொரோனா பரவும் விகிதம் 1 சதவிகதத்திற்கும் குறைவாக உள்ளது.

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் இரண்டு மடங்கு ஊரடங்கு ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

2200 ஊழியர்கள் அனைவரும் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை அமல்படுத்துவதில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு காவல் துறையில் அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை, டெல்லியை ஒப்பிடும்போது சென்னையில் பரவல் குறைவாகவே உள்ளது. மக்களுக்கும் தேவையான விழிப்புணர்வு கிடைத்துள்ளது. கொரோனாவை அரசு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை தற்போது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முதல் சிகிச்சை வரை அனைத்து கட்டமைப்புகளும் இங்கு சிறப்பாக இருப்பதால் மக்கள் பயம் இல்லாமல் இருக்கலாம்.

கிண்டி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை முழுமையாக இயக்க தமிழக முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்.

கடந்த 18 நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல் இடத்தில் இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் தற்போது 5 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியும், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டும் தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.

முதல்வரின் விசாலமான நடவடிக்கையால் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தெளிந்த சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

ஸ்டாலினின் அவதூறு தகவல்களை வைத்து குழுப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்தில் முழுமையான கட்டுக்குள் வரும்.

தண்டையார்பேட்டை மண்டலங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைக்கு என்னையே பணியாளர்கள் தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவதூறை தொடர்ந்து ஸ்டாலின் பரப்புவதால் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் எழுந்துள்ளது.

தேவையற்ற வதந்திகளை பரப்பாமல் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் கொரோனா பணியாளர்களுடன் பணியாற்ற உத்தரவிடுங்கள். அவர்கள் வந்து பணியாற்றுவதால் எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

பரிசோதனை அதிகரிப்பதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அதே வேளையில் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

நம்பிக்கை விதையை மட்டுமே மக்களிடையே விதைக்குமாறு ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

இதில் அதிமுக வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், கொரோனா தடுப்பு அதிகாரி மல்லிகா ஐபிஎஸ், புளிந்தோப்பு காவல் துறை துணை ஆணையாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் உட்பட பலர் இருந்தனர்.

தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு

 

 

 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் முதல் ஐந்து நாட்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை செய்துகொள்ள மக்கள் முன்வரவேண்டும்

நோய் அறிகுறிகள் தென்பட்டு முதல் 5 நாட்களுக்குள் சோதனைகள் செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் 100% குணப்படுத்தி விடலாம்

நோய் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு கடைசி ஐந்து நாட்களில் வந்தால் இறப்பு விகிதம் அதிகமாகிறது

கேரளாவில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் தான் கரீனா குறைந்துள்ளது
அதேபோல் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்

பேரிடர் காலத்திலும் குடிமராமத்து பணிகள் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்

மேலும் ஸ்டாலின் வெறும் அறிக்கை மட்டும் வெளியிடாமல் பேரிடர் காலத்தில் அரசுடன் தோள் கொடுக்க வேண்டும் அதைத்தான் மக்களும் விரும்புவார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்

கொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

கொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட அசோக் நகரில் கொரனோ தடுப்பு பணிகளை உணவு துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு மருத்துவ முகம் , பொதுமக்களுக்கு மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது,

முதலமைச்சரின் உறுதிமிக்க நடவடிக்கையினால் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை. வீடு திரும்பவோரின் எண்ணிக்கை தான் கூடுதலாகி வருகிறது. இறப்பு விகிதம் அதே அளவில்தான் நின்றுகொண்டிருக்கிறது.

உலக அளவில் தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 37000 தெருக்களில் 7300 தெருக்களில் மட்டும் தான் பாதிப்பு உள்ளது. எனவே சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா தொற்று உள்ளதாக பரவிவரும் புரளிகளை நம்ப வேண்டாம்.

வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் கொடுக்கும் பணி நேற்று வரை 56.08 சதவீதமாக இருந்தது. இன்றைக்கும் இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 70% கொடுத்து முடித்ததாகிவிடும் என்று நம்புகிறோம்.

கொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ரேஷன் கடைகளின் மூலம் ஆயிரம் ரூபாய் பணம் வீடு வீடாக சென்று கொடுப்பதற்காக போதுமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை.

சாத்தங்குளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்…அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி

சாத்தங்குளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்…அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரனா வார்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார்

புளியந்தோப்புகுடிசை மாற்று வாரியத்தில் நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அமைச்சர் காலை உணவை சுவைத்துப் பார்த்தார் மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

கொரனோ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் அதற்கான ஆலோசனைகளையும் முதல்வர் வழங்கி வருகிறார்

திருவிக நகர் மண்டலம் சூப்பர் என பாராட்டும் அளவில் உள்ளது… முதலிடத்தில் இருந்த திருவிக நகர் தற்பொழுது சென்னையில் திருவிக நகர் 6வது இடத்தில் உள்ளது

நோயாளிகளை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம் மேலும் நோயாளிகளுடன் தொடர்புடையவர்களை அதிகாரிகள் சிறப்பாக கண்டறிந்து வருகிறார்கள் இதன் மூலமாக தொற்றிலிருந்து மிக விரைவாக மீண்டு வருகிறது

நோயாளிகளை தேடி உணவுகள் சென்று சேர்க்கப்படுகிறது சிறப்பான உணவும் வழங்கப்படுகிறது வீடுகளில் வழங்கப்படும் உணவுகளை விட சிறப்பான உணவு வழங்கப்படுகிறது

தொற்றிணை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய அதிக கவனம் செலுத்தி வருகிறோம்

நோயாளிக்கு கொடுக்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்தோம் சுவையாக உள்ளது

1400படுகைகள் இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை கீழ்ப்பாக்கம் ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 4மருத்துவ கல்லூரியின் மேற்பார்வையில் இந்த இடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்..இதற்கு முதலில் தேவை நம்பிக்கை தான்…இதன் மூலம் தான் வெற்றி பெற வேண்டும்

இந்த தொடருக்கான நெறிமுறைகள் முன்பு இருந்ததில்லை தற்போதுதான் மருத்துவர்கள் மூலம் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன

எனவே குற்றம் சொல்லுபவர்கள் தொற்று பரவல் குறைந்த பின்பு இது பற்றின விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் தேவையின்றி கருத்துகள் கூறும் பொழுது மக்கள் மனதில் தேவையற்ற அச்சம் ஏற்படுகிறது

சாத்தான்குளம் விவகாரம் பொறுத்தவரையில் விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணைக்கு பின்பு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்

2லட்சத்து 15 ஆயிரம் முக கவசம் இந்த மண்டலத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது, கபசுர குடிநீர் வழங்கி வருகிறது.

2லட்சத்து 15 ஆயிரம் முக கவசம் இந்த மண்டலத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது, கபசுர குடிநீர் வழங்கி வருகிறது.

இரு கல்லூரி 300 படுக்கை தயார் நிலைநில் உள்ளது.

இதுவரை நடவடிக்கை குறித்தும், இனி எடுக்கபட உள்ள நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கபட்டது

கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் மண்டலம் 11ல் இன்று நடைபெற்றது.

235 மருத்துவ முகாம் இதுவரை நடைபெற்றுள்ளது

கொரோனா பரவல் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் கட்டுக்குள் உள்ளது.

இதனை கட்டுக்குள் கொண்டு வர தான் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மட்முமில்லாமல் மக்களிடையே விழிப்புணர்வு வேண்டும்

12 நாள் முழு ஊரடங்கை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலான தெருக்களை செக் போஸ்ட் அமைத்து காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும்.

12 நாட்களும் முழு ஊரடங்கை முழுமையாக தீவிரமாக கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இருசக்கர்வகானங்களில் சுற்றுவதை குறைக்க வேண்டும்

ஊரடங்கை முறையாக செயல்படுத்துவது குறித்து எதிர்கட்சி தலைவர் கூறியுள்ள கருத்துக்கு அவருக்கு இது போல சொல்வதற்கு நன்றாக இருக்கும்.

அத்தியாவசிய தேவை என ஒன்று உண்டு.

12 நாளுக்கு தேவைநான பொருட்களை வாங்க போதிய அவகாசமுமர் வழங்கப்பட்டுள்ளது.

12 நாள் 144 தடை உத்தரவு கடுமையாக இருக்கும்.

ஒரு ஏரியாவில் ஒரு மளிகை கடை, பால் புத், மெடிக்கல் இருந்தால் அதனை லாக் செய்ய அறிவுரை வழங்கி உள்ளோம்

பேட்டி

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வெளி நாடுகளில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றுஅப்துல் ரஹீம் கோரிக்கை

 

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சார்ந்த சார்ந்தவர்களை தாயகம் அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில பொருளாளர் அப்துல் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மண்ணடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் இணைய வழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெளி நாடுகளில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என மாநில/ மத்திய அரசை கோரிக்கை விடும்
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறினார்.

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தற்போது பொருளை பரவி வரும் இந்த சூழலில் அகதிகளைப் போல வாழ்ந்து வருவதாகவும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்த அவர் உடனடியாக அவர்களை தமிழக அரசு தாயகம் அழைத்துவர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக தமிழகம் முழுவதும் 1 கோடி ரூபாய்க்கும் மேலாக நிவாரண உதவிகளை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

அக்குபஞ்சர் முறையில் கொரனாவிற்கு எதிர்ப்பாற்றல் உருவாக்குவது தொடர்பாக செய்முறை

 

கொரனாவிற்கு எதிர்ப்பாற்றலை உருவாக்க முடியும் அக்குபஞ்சர் டாக்டர் எம் என் சங்கர்

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்குபஞ்சர் முறையில் கொரனாவிற்கு எதிர்ப்பாற்றல் உருவாக்குவது தொடர்பாக செய்முறை விளக்கத்தினை டாக்டர் சங்கர் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

இந்தியர்கள் பொதுவாகவே எதிர்பாற்றல் மிக்கவர்கள் எனவே அவர்களுக்கு அக்குபஞ்சர் முறையில் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொழுது கொரனாவிற்கு எதிரான சக்தியை பெறமுடியும்

இந்தியர்கள் அனைவரும் நாட்டுக்கோழியை போன்றவர்கள் எனவே அவர்களுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலமாகவே கொரணாவிற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றார்