அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணித்து வரப்படுகிறது
20 நாட்களுக்கு 49% இருந்த குணமடைந்த விகிதம், 60% பேர் சென்னை மாநகரில் குணமடைந்துள்ளனர்
தினந்தோறும் 500 க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு, தீவிர அறிகுறி இருப்பவர்களை சோதனைக்கும் அழைத்து செல்கின்றனர்.
வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் நிலை குறித்து கண்டறிய சோதனை மேற்கொள்ள செல்லும் அனைவருக்கும் தெர்மல் மீட்மர், ஆக்ஸி மீட்டர் வழங்கப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் இதிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

5 மாவட்டங்களில் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் தேவையன்றி வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழகத்தை பொறுத்த வரை வேறு எங்கும் இல்லாத வகையில் அனைவருக்கும் விலையில்லா அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது, விலையில்லாமல் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம். என கூறினார்