அதிமுகவுக்கு எதிராக பலர் திட்டம் தீட்டினாலும், யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாத அளவுக்கு வலிமையாக உள்ளது

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பேரணாம்பட்டில் நடைபெற்ற பிரமாண்ட பிரசாரக் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர் எனவும், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்டாலின் எந்தக் காலத்திலும் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது, எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், எதிர்கட்சியாக இருக்கும் போதே அராஜகம் செய்யும் திமுக, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறினார்,