இருசக்கர வாகனத்தில் கஞ்சா டெலிவரி- ஐ.ஐ.டி.யில் பணிபுரிபவர் உட்பட மூவர் கைது

Deen 8248103078

*சென்னையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா டெலிவரி- ஐ.ஐ.டி.யில் பணிபுரிபவர் உட்பட மூவர் கைது

சென்னையில் போனில் தொடர்பு கொண்டு இரு சக்கரவாகனங்கள் மூலம் கஞ்சா விற்பதாக புகார் போலீசாருக்கு வந்தது. இது குறித்து சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சா டெலிவரி செய்யும் நபர்களை போலீசார் தேடி வந்தனர். சம்பந்தப்பட்ட நபர்களை கையும் களவுமாக பிடிப்பதற்கு போலீசார் மாறுவேடத்தில் கஞ்சா கேட்டுள்ளனர். கோடப்பாக்கத்திற்கு வரச் சொன்ன அந்த கஞ்சாவை லிண்டன் டோனி என்பவர் டெலிவரி செய்யும் போது கையும் களவுமாக தனிப்பை போலீசார் பிடித்தனர். அவனைபிடித்த விசாரணை செய்த போது கஞ்சாவை விற்க சொன்ன முக்கிய குற்றவாளிகளான கமலகண்ணன், மற்றும் ஐ.ஐ.டி.யில் பணிபுரியும் அரவிந்த என்பவரையும் தனிபடை போலீசார் கைது செய்துள்ளனர்.