எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் முதல்வர் வெளியிடுகிறார்

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் முதல்வர் வெளியிடுகிறார்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை, கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள படத்திற்கு இன்று காலை 11 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவாக எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.