ஓட்டலில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் எஸ்.ஐ மீது கொடூர தாக்குதல்

ஓட்டலில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் எஸ்.ஐ மீது கொடூர தாக்குதல்

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணியாற்றுபவர் பழனி (48). நேற்று முன்தினம் இரவு டிரைவர் சதீஷ்குமார் (32) என்பவருடன் கொடுங்கையூரில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆர்.வி.நகர், கட்டபொம்மன் நகர் 7வது மெயின் ரோட்டில் ராஜா என்பவருக்கு சொந்தமான துரித உணவகத்தில் 4 பேர் அமர்ந்து, மது அருந்தி கொண்டிருந்தனர். இதை எஸ்.ஐ பழனி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் எஸ்.ஐ பழனியை உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இதை தடுக்க வந்த டிரைவர் சதீஷ்குமாரையும் தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் எஸ்.ஐ பழனி தலையில் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் விரட்டி சென்று, 2 பேரை மடக்கி பிடித்தனர்.