கருப்பு பணத்தை ஒடுக்க போதுமான சட்டங்கள் இல்லை:ராவத் ஆதங்கம்

தேர்தலில் கருப்பு பணத்தை ஒடுக்க போதுமான சட்டங்கள் இல்லை:ராவத் ஆதங்கம்

புதுடில்லி: தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கருப்புபணத்தை பிரயோகிக்கி்ன்றனர். இதனை தடுக்க இந்திய சட்டங்கள் போதுமானதாக இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியி்ல் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியது, இந்தியா எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொண்டுவந்தாலும் முக்கிய பிரச்னை எதுவென்றால் ”தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் பணத்தைத் தவறாகக் கையாளும் போக்குதான் இதனாலேயே தேர்தல் பிரச்சாரங்களின்போது வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதில் பெரும் சவால் நீடிக்கிறது.

தேர்தலின்போது புழங்கும் பணத்தொகையைக் கட்டுப்படுத்தப் போதுமான சட்டவிதிகள் இந்தியாவில் இல்லை. இதனால் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கிறது”மேலும் ”தேர்தல் நேரங்களில் பொய்யான செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. அதை ஊடகங்களே முயன்று தடுக்க வேண்டும்” என்றார்.