காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

டி.குருபரப்பள்ளி கிராமத்தில் முகாமிட்டிருந்த 25க்கும் மேற்பட்ட காட்டு யானைகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து யானைகளை காட்டுக்குள் விரட்டி அடிக்கும்படி வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அங்கு முகாமிட்டு பட்டாசுகள் வெடித்தும், சப்தங்கள் எழுப்பியும் காட்டு யானைகளை விரட்டி அடித்தனர்.