குடிநீர் பற்றாக்குறை காரணத்தினால் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிநீர் வழங்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் பொதூமக்கள் கோரிக்கை

ஊரப்பாக்கத்தில் குடிநீர் கிணற்றிலிருந்து தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிநீர் வழங்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் பொதூமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு:அக்,3- செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் பொதுக்கிணற்றிலிருந்து தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கம் இராதா நகர் பகுதியில் நூற்றாண்டுகளை கடந்த பொதுக்கிணறு உள்ளது இக்கிணற்றிலிருந்து ஊரப்பாக்கம், இராதா நகர் மற்றும் அருகில் உள்ள சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரப்பாக்கம்- காரணைபுதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இக்கிணற்றில் மின் மோட்டார் அமைத்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் தற்காலிகமாக தனியார் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களாக மீண்டும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று கிணற்றிலிருந்து குடிநீர் எடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். எனவே ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கே குடிநீர் பற்றாக்குறை உள்ல இந்நேரத்தில் தனியார் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவது நியாமற்றது. உடனடியாக தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொதுக்கிணற்றிலிருந்து குடிநீர் வழங்குவதை மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து தடுத்து நிறுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.