கொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

கொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட அசோக் நகரில் கொரனோ தடுப்பு பணிகளை உணவு துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு மருத்துவ முகம் , பொதுமக்களுக்கு மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது,

முதலமைச்சரின் உறுதிமிக்க நடவடிக்கையினால் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை. வீடு திரும்பவோரின் எண்ணிக்கை தான் கூடுதலாகி வருகிறது. இறப்பு விகிதம் அதே அளவில்தான் நின்றுகொண்டிருக்கிறது.

உலக அளவில் தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 37000 தெருக்களில் 7300 தெருக்களில் மட்டும் தான் பாதிப்பு உள்ளது. எனவே சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா தொற்று உள்ளதாக பரவிவரும் புரளிகளை நம்ப வேண்டாம்.

வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் கொடுக்கும் பணி நேற்று வரை 56.08 சதவீதமாக இருந்தது. இன்றைக்கும் இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 70% கொடுத்து முடித்ததாகிவிடும் என்று நம்புகிறோம்.

கொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ரேஷன் கடைகளின் மூலம் ஆயிரம் ரூபாய் பணம் வீடு வீடாக சென்று கொடுப்பதற்காக போதுமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை.