தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாப பலி

நைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாப பலி

நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.